நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5269
Zoom In NormalZoom Out


 

எனவே,  முதற்கந்தருவம் ஐந்துமேயன்றி அவற்றொடு பொருத்தமுடைய
கந்தருவம்     இவ்வைந்துமென    வேறுபடுத்தினார்.   இவை   அப்
பன்னிரண்டனுட்  கூறாநின்ற ஐந்தும்,   முதலொடு   புணர்ந்தவென்றே
ஒழியாது பின்னும் ‘யாழோர்  மேன’ வென்றார், இவையுங்  கந்தருவமே
என்றற்கு.   இவையும்  ஒருவன்  ஒருத்தி  யெதிர்  நின்று உடம்படுத்த
லொப்புமையுடைய.   ‘கெடலருஞ்   சிறப்’  பெனவே    முதல்   கரு
உரிப்பொருளானுங்     களவென்னுங்     கைகோளானும்     பாங்கி
புணர்த்தலின்மையானும்       இலக்கணங்       குறைப்பட்டவேனுஞ்,
சுட்டியொருவர் பெயர்கொள்ளப்பட்டுக் கற்பியலாகிய இல் வாழ்க்கையும்
பெற்றுவருதற் சிறப்புடைய இவையும், ஐந்நிலம் பெறு மென்றானாம். இது
புலநெறியன்றி   உலகியலாகலின், உலகியலாற் பாலைநிலனும்  ஆண்டு
வாழ்வார்க்கு   மன்றலும்  உளவாகலிற் பாலையுங் கூறினார்.  எனவே,
ஐம்புலத்து     வாழ்வார்     மணமுஞ்    செய்யுளுட்   பாடியக்கால்
இழுக்கின்றென்றார். (15)

தலைவிக்குரிய கிளவிகள் இவையெனல்

இருவகைக் குறிப்பிழைப் பாகிய விடத்தும்
காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினும்
தானகம் புகாஅன் பெயர்த லின்மையின்
காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி

வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும்
புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்
வேளா ணெதிரும் விருந்தின் கண்ணும்
வாளா ணெதிரும் பிரிவி னானும்
நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும்
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரைதீர் கிளவி புல்லிய வெதிரும்
வரைவுடன் படுதலும் ஆங்கதன் புறத்துப்
புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக்
கிழவோண் மேன வென்மனார் புலவர்.

இது மேற் றலைவற்குரிய கிளவிகூறிப், பாங்கனி மித்தம் அவன்கண்
நிகழும்   பகுதியுங்   கூறி,   அம்முறையானே  தலைவிக்குரிய கிளவி
கூறுகின்றது.

(இ-ள்.)  இருவகைக்குறி  பிழைப்பு  ஆகிய  இடத்தும்  -  இரவுக்
குறியும் பகற்குறியும் பிழைத்தவிடத்தும்:

உ-ம்:

“முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்