நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5270
Zoom In NormalZoom Out


 

ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவிமுதல் இசைக்கு மரவமொடு
துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே”     (குறுந்.301)

“கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே
யெம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி
யணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே”         (குறுந்.138)

“ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன்
மாறினெ னெனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப
கூடுதல் வேட்கையான் குறிபார்த்துக் குரல்நொச்சிப்
பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக”   (கலி.46)

“இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக்
கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல்
எம்மினு முயவுதி செந்தலை யன்றில்
கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ
நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே.”

இது தன்னுட் கையாறெய்திடு கிளவி.

“புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல்
துன்ப முழவாய் துயிலப் பெறுதியால்
இன் கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ”
                               (சிலப்.கானல்வரி.33)

எனவும்  இவை குறிபிழைத்துழித் தன்வயி னுரிமையும் அவன் வயிற்
பரத்தைமையும் படக் கூறியனவாம்.   குறிபிழைத்தலாவது  புனலொலிப்
படுத்தலும்  புள்ளெடுப்புதலும்  முதலியன.   குறியெனக்   குறித்தவழி,
அவனானன்றி அவை வேறொரு காரணத்தான்  நிகழ்ந்துழி,  அதனைக்
குறியென  நினைந்து சென்று அவை அவன்குறி  யன்மையின் அகன்று
மாறுதலாம். பகற்குறிக்கு உதாரணம் வந்துழிக் காண்க.

காணா  வகையிற்   பொழுது நனி இகப்பினும் - குறிவழிச் செல்லுந்
தலைவனை இற்றைஞான்றிற் காண்டல்அரிதென்று கையறுவதோராற்றாற்
பொழுது சேட்கழியினும்:

என்றது, தாய்துஞ்சாமை, ஊர்துஞ்