லும் வெளிப்பட நிகழாமையின் இவை
புலவிப் போலி. பரத்தை - அயன்மை. அவன்கட்
பரத்தை மையின்றேனும் காதன்மிகுதியான்
அங்ஙனங் கருதுதல் பெண்தன்மை, உம்மை எதிர்மறையாகலின்
இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை.
(இ-ள்.)
மறைந்து அவற் காண்டல் - தலைவன் புணர்ந்து
நீங்குங்கால் தன் காதன்மிகுதியான் அவன் மறையுந்துணையும் நோக்கி
நின்று அங்ஙனம் மறைந்தவனைக்
காண்டற்கண்ணுந் தோழிக்குக்
கூற்றாற் கூறுதலுள:
உ-ம்:
“கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும்
வண்டற் பாவை வரிமண லயர்ந்தும்
இன்புறப் புணர்ந்து மிளிவரப் பணிந்தும்
தன்றுயர் வெளிப்படத் தவறி நந்துயர்
அறியா மையி னயர்ந்த நெஞ்சமொடு
செல்லு மன்னோ மெல்லம் புலம்பன்
செல்வோன் பெயர்புறத் திரங்கி முன்னின்று
தகைஇய சென்றவெ னிறையி னெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே யெய்தியும்
காமஞ் செப்ப நாணின்று கொல்லோ
உதுவ காணவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண்மணற் குவவுமிசை யானும்
எக்கர்த் தாழை மடல்வயி னானும்
ஆய்கொடிப் பாசடும் பரியவூர் பிழிபு
சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த
கடுஞ்செலற் கொடுந்திமில் போல
நிவந்துபடு தோற்றமொ டிகந்துமா யும்மே.”
(அகம்.330)
‘அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு’ என்பது தன்வயினுரிமை;
‘இகந்து மாயும்’ என்பது அவன்வயிற் பரத்தைமை.
தற்காட்டுறுதல் - தன்னை அவன் காணாவகை நாணான் மறைந்து
ஒழுகினுந் தன் பொலிவழிவினை அவற்குக்
காட்டல் வேண்டுதற்
கண்ணும்: அது,
“இன்ன ளாயினள் நன்னுத லென்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே.”
(குறுந்.93)
‘இன்னளாயின’ ளென்றது தற்காட்டுறுதல், ‘செப்புநர்ப் பெறினே’
யென்பதனாற்களவாயிற்று; கற்பிற்கு வாயில்கள் செப்புவார் உளராதலின், இதற்கு இரண்டும் உள.
நிறைந்த
|