நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5282
Zoom In NormalZoom Out


 

தலைவி காதல்   மிகுதியான் தலைவன் பரத்தைமையை   எதிர்கூற
நினைந்து கூற்றெய்தாது குறைபடுதற்கண்ணும்.

உ-ம்:

“பிறைவனப் பிறந்த நுதலும் யாழநின்
இறைவரை நில்லா வளையு மறையாது
ஊரலர் தூற்றுங் கௌவையு முள்ளி
நாண்விட்டுரையவற் குரையா மாயினு மிரை வேட்டுக்
கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது
கழனி யொழிந்த கொடுவாய்ப் பேடைக்கு
முடமுதிர் நாரை கடன்மீ னொய்யு
மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக்
கரப்பவுங் காப்பவுங் கைம்மிக்
குரைத்த தோழி யுண் கணீரே.”              (நற்.263)

இது ‘யாம் உரையாமாயினுங்கண் உரைத்தன’ என்றலின்  இரண்டுங்
கூறினாள்.

வழிபாடு மறுத்தல் - வருத்தமிகுதியாற்  தலைவனை   வழிபடுதலை
மறுத்துக் கூறுமிடத்தும்:

உ-ம்:

“என்ன ராயினு மினிநினை வொழிக
வன்ன வாக வுரையல் தோழியாம்
இன்ன மாகநத் துறந்தோர் நட்பெவன்
மரனா ருடுக்கை மலையுறை குறவர்
அறியா தறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற் றார முருக்கிப் பையென
மரம்வறி தாகச் சோர்ந்துக் காங்கென்
அறிவு முள்ளமு மவர்வயிற் சென்றென
வறிதா லிகுளையென் யாக்கை யினியவர்
வரினு நோய்மருந் தல்லர் வாரா
தவண ராகுக காதல ரிவணங்
காமம் படரட வருந்திய
நோய்மலி வருத்த காணன்மா ரெமரே”          (நற்.64)

“உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா
திருப்பினெம்மளவைத் தன்றே வருத்தின்
வான்றோய் வற்றே காமம்
சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே”           (குறுந்.102)

என வரும்.

“நீயுடம் படுதலின் யான்றர வந்து
குறிநின் றனனே குன்ற நாடன்
இன்றை யளவை சென்றைக் கென்றி
கையுங் காலு மோய்வன வொழுங்கி
தீயுறு தளிரி னடுங்கி
யாவது மில்லையான் செயற்குரி யதுவே.”      (குறுந்.388)

இதுத்  தோழி   கூற்றே;  ‘சென்றைக்க’   வென்றதனான்  தலைவி
மறுத்தமை பெற்றாம்.

மறுத்து  எதிர்கோடல்  -  அங்ஙனம்  வழிபாடு மறுத்த தலைவியே
 அவனை ஏற்றுக்கோடலை விரும்பியக்கண்ணும்: அது,

“கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முறிந்துநிலம் படாஅ