நாளுடைய யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.” (குறுந்.112)
இது ‘நாணேயுள்ளது கற்புப்போம்’
என்றலின் மறுத்தெதிர்
கோடலாம்.
பழி தீர்முறுவல் சிறிதே தோற்றல்-தன் கற்பிற்கு வரும் பழி தீர்ந்த
தன்மையான் தன்கண் தோன்றிய மகிழ்ச்சியைச் சிறிதே தோழிக்குத்
தோற்றுவித்தற்கண்ணும்:
தலைவனான் தோன்றிய நோயும் பசலையும் முருகனான் தீர்ந்த
தென்று அவன் கேட்பிற் கற்பிற்குப் பழியாமாதலிற் ‘பழி’ யென்றார்.
உ-ம்:
“அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்
இதுவென வறியா மறுவரற் பொழுதின்
படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூறக்
களனன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்
ஆரம் நார வருவிடர்த் ததைந்த
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கின்
ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத்
தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப
இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லனோ யானே எய்த்த
நோய்தணி காதலர் வரஈண்டு
ஏதில் வேலற் குலந்தமை கண்டே.”
(அகம்.22)
இதனுட் பழிதீர அவன் வந்து உயிர்தளிர்ப்ப முயங்கி
நக்க
நிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க:
கைபட்டுக் கலங்கினும் - தலைவி குறிப்பின்றி எதிர்ப்பட்ட தலைவன் ஒருவழி
அவளை அகப்படுத்தவழிக் காட்சி விருப்பினளாயினும் அப்பொழுது அவள் கலங்கினும்:
எனவே, காட்சி விருப்பினை மீதூர்ந்து
கலக்கம் புலப்பட்டது தலைவன்வயிற் பரத்தைமை கருதி.
“கெடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப்
பொ
|