நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5286
Zoom In NormalZoom Out


 

ரண் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப்
பண்டங்கொள் நாவாய் வழங்குந் துறைவனை
முண்டகக் கானலுட் கண்டேன் எனத் தெளிந்தேன்
நின்ற வுணர்விலா தேன்.” (ஐந்.எழு.61)

இது முன்பு இன்பந்  தருவனென  உணர்ந்துநின்ற உணர்வு ஈண்டில்
லாத யான் புணர்ச்சி வருத்தந்தருமென்று தெளிந்தேனென்றா ளென்க.

விட்டு   உயிர்த்து   அழுங்கினும் - கரந்த  மறையினைத்  தலைவி
தமர்க்கு   -    உரைத்தற்குத்    தோழிக்கு    வாய்விட்டுக்    கூறி,
அக்கூறியதனையே தமர்கேட்பக் கூறாது தவிரினும்:

உயிர்த்தல் - கூர்தல்.

உ-ம்:

“வலந்த வள்ளி மரனோங்கு சாரல்
கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா விசைய பூசல் பயிற்றலின்
ஏக லடுக்கத் திருளளைச் சிலம்பின்
ஆகொள் வயப்புலி யாகுமஃ தெனத்தம்
மலைகெழு சீறூர் சிலம்பக் கல்லெனச்
சிலையுடை யிடத்தார் போதரு நாடன்
நெஞ்சமர் வியன்மார் புடைத்தென வன்னைக்
கறிவிப் பேங்கொ லறிவியேங் கொல்லென
இருபாற் பட்ட சூழ்ச்சி யொருபால்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன்னுயிர் கழிவ தாயினு நின்மகள்
ஆய்மல ருண்கட் பசலை
காம நோயெனச் செப்பா தீமே.”             (அகம்.52)

இது சிறைப்புறம்.

நொந்து தெளிவு ஒழிப்பினும்  -  வரைவு   நீட்டித்துத்   தலைவன்
சூளுற்றவழி அதற்கு நொந்து தெளிவிடை விலங்கினும்:

உ-ம்:

“மன்றத் துறுகற்கருங்கண் முசுவுகளும்
குன்றக நாடன் றெளித்த தெளிவினை
நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி
ஒன்றுமற் றொன்று மனைத்து”         (ஐந்திணை எழு.9)

என வரும்.

“எம்மணங்கினவே.”   (குறுந்.53)  என்பது  தலைவி  கூறக்கேட்டுத்
தோழி கூறியது. அதுவும் இதனாற் கொள்க.

அச்சம்     நீடினும் - தெய்வம் அச் சூளுறவிற்கு அவனை வருத்து
மென்றுந் தந்தை தன்னையர் அறிகின்றாரோ வென்றுங் கூட்ட முண்மை
உணர்ந்த தோழிக்கு உண்மை கூறுதற்கும் அஞ்சிய அச்சம் நீட்டி