மன்னோ
என்மலைந் தனன்கொ றானே தன்மலை
ஆர நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே”
(குறுந்.161)
“பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்
எலவென் றிணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்
புலவுங்கொல் தோழி புணர்வறிந் தன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து.”
(திணை ஐம்.10)
இவையும் அது. இன்னும் ‘மனைப்பட்டுக் கலங்கி’ யென்றதனாற்
காப்புச் சிறைமிக்க கையறு கிளவிகளுங் கொள்க.
“சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
துறைபோ கறுவைத் தூமடி யன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே
எம்மூர் வந்தெம் ஒண்டுறைத் துழைஇச்
சினைக்கெளிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி
அனையவன் பினையோ பெருமற வியையோ
ஆங்கட் டீம்புனல் ஈங்கட் பரக்கும்
கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே.”
(நற்.70)
“கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த
ஆர லிரைகருதி நித்தலு நிற்றியால்
நேரிணர்ப் புன்னைக்கீழ்க் கொண்கன் வருமெனப்
பேருண்க ணீர்மல்க நின்றாண்மற் றென்னாயோ.”
“ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய்
வண்டூது பூங்கானல் வைகலுஞ் சேறிரால்
பெண்டூது வந்தே மெனவுரைத்தெங் காதலரைக்
கண்டீர் கழறியக்கால் கானல் கடிபவோ.”
இவை காப்புச் சிறைமிக்க கையறுகிளவி.
உயிராக் காலத்து உயிர்த்தலும்
- தலைவனொடு தன்றிறத்து
ஒருவரும் ஒன்ற உரையாதவழித்,
தனதாற்றாமையான், தன்னோடும்
அவனோடும் பட்டன சில மாற்றந் தலைவி தானே கூறுதலும் உள:
தோழி மறைவெளிப்படுத்துக் கோடற்கு வாளாது
இருந்துழித்,
தலைவன் தன்மேல் தவறிழைத்தவழி,
இரண்டும்படக் கேட்போ
ரின்றியுங் கூறுதலாம்.
உ-ம்:
“உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடிக்
கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சா துறைநரொ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.” (குறுந்.145)
“தழையணி யல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் லாக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புட னெதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை
|