நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5292
Zoom In NormalZoom Out


 

யென்னும்
அவல நெஞ்சமோ டுசாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே.”          (குறுந்.159)

என வரும்.

உயிராதாள் தோழியாயினாள்; அவள் தலைவி கூறுவன கேட்டற்குப்
பொய்த்துயில் கொள்ளும்.

உயிர்த்தலுமெனப்  பொதுப்படக்  கூறியவதனான்  தோழிக்குக்
கூறுவனவுங் கொள்க.

“பேணுப பேணார் பெரியோ ரென்பது
நாணுத்தக் கன்றது காணுங் காலை
யுயிரோ ரன்ன செயிர்தீர் நட்பின்
நினைக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி
தழிதக் கன்றாற் றானே கொண்கன்
யான்யா யஞ்சுவ லெனினும் தானே
பிரிதல் சூழான் மன்னே இனியே
கான லாய மறியினும் ஆனா
தலர்வ தன்றுகொல் என்னு மதனால்
புலர்வது கொல்லவன் நட்பெனா
அஞ்சுவல் தோழியென் னெஞ்சத் தானே.”      (நற்.72)

என வரும்.

உயிர்செல வேற்று வரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும் -
இறந்து பாடு  பயக்குமாற்றான்  தன்றிறத்து  நொதுமலர்  வரையக்
கருதிய ஞான்று அதனை மாற்றுதற்கண்ணும்:

உ-ம்:

“அன்னை வாழிவேண் டன்னை புன்னைப்
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை யென்றும் யாமே இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்
ஆங்கு மாக்குமோ வாழிய பாலே.”        (ஐங்குறு.110)

“பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச்
செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்
இருவெதிர் நீடமை தயங்கப்பாயும்
பெருவரை யடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை யன்ன நட்பினன்
புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே.”       (குறுந்.385)

நெறிபடு   நாட்டத்து  நிகழ்ந்தவை  மறைப்பினும் - தோழி  கூட்ட
முண்மை  வழக்கியலால்  நாடுகின்ற  காலத்துக்,  கண்சிவப்பும்  நுதல்
வேறுபாடும் முதலிய  மெய்வேறுபாடு  நிகழ்ந்துழி,  அவற்றைத் தோழி
அறியாமலுஞ்  செவிலி அறியாமலுந் தலைவி தான் மறைப்பினும்:

உ-ம்:

“கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும்
ஒண்டொடி மகளிர் தண்டழை யல்குலும்
காண்டொறுங் கவினை யென்றி அதுமற்
றீண்டு மறந்தனையாற் பெரிதே வேண்டாய்
நீயெவன் மயங்கினை தோழி
யாயினுஞ் சிறந்தன்று நோய்பெரி துழந்தே.”

காதன் மிகுதியாற் கவினையெனற் பாலாய், வேறுபட்டனை  யென்று
எற்றுக்கு மயங்கினை யெனத் தலைவி தன் வருத்தம் மறைத்தாள்.

“துறைவன் துறந்