நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5293
Zoom In NormalZoom Out


 

தெனத் துறையிருந் தழுதஎன்
மம்மர் வாண்முகம் நோக்கி அன்னைநின்
அவல முரையென் றனளே கடலென்
பஞ்சாய்ப் பாவை கொண்டு
வண்டலஞ் சிறுமனை சிதைத்ததென் றேனே.”

இது செவிலிக்கு மறைத்தது.

ஒருமைக்     கேண்மையின்  உறுகுறை  -  தான்  அவளென்னும்
வேற்றுமையில்லாத நட்பினானே தோழி தனக்கு வந்து கூறிய குறையை;
பொறியின்  யாத்த  புணர்ச்சி  நோக்கித்  தெளிந்தோள்  -  முன்னர்த்
தெய்வப்    புணர்ச்சி   நிகழ்ந்தமை   நோக்கி  அது   காரணத்தான்
முடிப்பதாகத் தெளிந்த தலைவி; அருமை சான்ற நால் இரண்டுவகையின்
- தான் முன் அருமை அமைந்துநின்ற  நிலையான் தலைவன்  தன்கண்
நிகழ்த்திய மெய் தொட்டுப்  பயிறன்  முதலிய  எட்டினானே; பெருமை
சான்ற  இயல்பின் கண்ணும் - தனக்கு உள தாம்  பெருமை  கூறுதற்கு
அமைந்ததோர் இயல்பின்கண்ணும்:

என்றது, தலைவன் இத்துணை இளிவந்தன செய்யவும் யான் நாணும்
மடனும் நீங்கிற்றிலேனென்று தன் பெருமை தோழிக்குக் கூறுதலாம்.

உ-ம்:

“மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோல்
பொன்னகைத் தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப்
போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை
இன்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய்
நன்னுதால் நினக்கொன்று கூறுவாங் கேளினி;
நில்லென நிறுத்தான் நிறுத்தே வந்து
நுதலும் முகனும் தோளும் கண்ணும்
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ
யைதேய்ந் தன்று பிறையு மன்று
மைதீர்ந் தன்று மதியு மன்று
வேயமன் நன்று மலையு மன்று
பூவமன்றன்று சுனையுமன்று
மெல்ல வியலும் மயிலுமன்று
சொல்லத் தளரும் கிளியு மன்று;
எனவாங்கு
அனையன பலபா ராட்டிப் பையென
வலையர் போலச் சோர்பதன் ஒற்றிப்
நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப்
புலையர் போலப் புன்க ணோக்கித்
தொழலுந் தொழுதான் தொடலுந் தொட்டான்
காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன்
தொழூஉந் தொடூஉமவன் றன்மை
ஏழைத் தன்மையோ வில்லை தோழி.”

இதனுட்  ‘பாராட்டி’    யெனப்   பொய்பாராட்டலுஞ்,   ‘சோர்பத
னொற்றி’யென  நெஞ்சு நெகிழ்ந்த  செவ்வி  கூறுதலிற்  கூடுதலுறுதலும்
“புலை