நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5294
Zoom In NormalZoom Out


 

யர்போல் நோக்கி’யென நீடு  நினைந் திரங்கலும், ‘தொழலுந் தொழுதா’
னென  இடம்பெற்றுத்    தழாஅலுந்’   ‘தொடலுந்  தொட்டா’  னென
மெய்தொட்டுப்   பயிறலும்,   அவனிகழ்த்தியவாறுங்   கூறி,  மதத்தாற்
பரிக்கோலெல்லையில்  நில்லாத  களிறுபோல்,  வேட்கை   மிகுதியான்
அறிவினெல்லையில்  நில்லாதவனெனத்  தீராத் தேற்றமும் ஒருவாற்றாற்
கூறித்,  தனக்குப்   பெருமைசான்ற   இயல்பைப்   பின்னொரு  கால்
தோழிக்குக் கூறியவாறு காண்க.

இனித்  தலைவற்குப் பெருமை  அமைந்தன  எட்டுக்குண  மென்று
கூறி, அவற்றை,

“இளமையும் வனப்பு மில்லொடு வரவும்
வளமையும் தறுகணும் வரம்பில் கல்வியும்
தேசத் தமைதியும் மாசில் சூழ்ச்சியும்”  (பெருங்.1:36-89-91)

எனப்  பொருள்   கூறின்,  ‘அறுவகைப்பட்ட  பார்ப்பனப்   பக்கமும்’
(தொல்.பொ.75)  என்னுஞ்  சூத்திரத்திற் கூறிய  எண்கள் அவை கூறிய
வட  நூல்களில்  வேறே   எண்ணுதற்கு   உரியன  சில   இல்லாமல்
எண்ணினாற்போல,   ஈண்டும்   இளமை   முதலிய  எட்டும்   ஒழிய
வேறெண்ணுதற்கு உரியன எட்டு தலைவற்கிலவாகக்  கூறல்  வேண்டும்;
ஈண்டு  அவ்வாறின்றித்  தலைவற்கு   உரியனவாகப்   பலவகைகளான
எவ்வெட்டுளவாகக்    கூறக்கிடந்தமையின்   அங்ஙனம்     ஆசிரியர்
இலக்கணங்    கூறாரென    மறுக்க.   அன்றியும்   எட்டும்  எடுத்து
ஓதுபவென்றும் உதாரண மின்றென்றும் மறுக்க.

இனி ‘முட்டுவயிற்கழறன், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின கறல்,
அவன் புணர்வு மறுத்தல், தூது  முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல்
கைம்மிகல்,  கட்டுரையின்மை’ என்பன  எட்டுமென்று  (தொல்.பொ.271)
அவற்றை ஈண்டுக்கொணர்ந்து பொருள்கூறிற், கூற்றுக் கூறுகின்றவிடத்து
மெய்ப்பாடு கூறின் ஏனைமெய்ப்பாடுகளுங் கூற்றுக்  கூறுகின்றவிடத்தே
கொணர்ந்து கூற்றினுள் அடங்கக் கூறல்வேண்டு மென்று மறுக்க.

பொய்தலை   அடுத்த   மடலின்கண்ணும் - பொய்யினைத் தலைக்
கீடாகவுடைய மடலின் கண்ணும்:

அது மடன்மா கூறியவழி  அம்மடலினை மெய்யெனக்  கொண்டாள்
அதனைப் பொய்யெனக் கோடலாம்.

உ-ம்:

“வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே
அவையினும் பலவே சிறுகருங் காக்கை
அவையினும் அவையினும் பலவே குவிமடல்
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த
தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே.”

இது மடன்மா கொள்ளக் குறித்தோனைப் பறவை