நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5297
Zoom In NormalZoom Out


 

ர்ச்சி கடிதுமெனவும் இரண்டும் கூறினாள்.

“கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து
வானின் அருவி ததும்பக் கவினிய
நாட னயனுடைய னென்பதனான் நீப்பினும்
வாடல் மறந்தன தோள்.”             (ஐந்திணை எழு.2)

‘நயனுடையன்’  என்பதனான்  வரைவு  தலைவந்தமையும், ‘நீப்பினு’
மென்பதனான் அவன் வயிற் பரத்தைமையுங் கூறினாள்.

களவு  அறிவுறினும்  -  தம்  ஒழுகலாறு  புறத்தார்க்குப் புலனாகத்
தலைவன் ஒழுகினும்; ஆண்டும் அவ்விரண்டுங் கூறும்.

உ-ம்:

“நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து
மால்கடற் றிரையின் இழிதரு மருவி
அகலிருங் கானத் தல்கணி நேக்கித்
தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல்
போதெழின் மழைக்கண் கலுழ்தலின் அன்னை
யெவன்செய் தனையோநின் னிலங்கெயி றுண்கென
மெல்லிய வினிய கூறலின் வல்விரைந்
துயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந்
துரைக்கலுய்ந் தனனே தோழி சாரற்
காந்த ளூதிய மணிநிறத் தும்பி
தீந்தொடை நரம்பி னிமிரும்
வான்றோய் வெற்பன் மார்பணங் கெனவே.”      (நற்.17)

யான்  அவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதேனாக அதனைக்
கண்டு நீ எவன் செய்தனையென வினாய அன்னைக்கு, இம்மறையினைக்
கூறலுற்றுத்  தவிர்ந்தேனெனத்  தாய்  களவறிவுற்றவாறு  கூறக்  கருதி,
அவன்வயிற் பரத்தைமை கூறிற்று.

தமர்  தற்காத்த  காரண  மருங்கினும்  -  அங்ஙனங்  களவறிவுற்ற
அதன்றலைச்,  செவிலி  முதலிய  சுற்றத்தார்  தலைவியைக்  காத்தற்கு
ஏதுவாகிய காரணப்பகுதிக்கண்ணும்:

ஆண்டுந் தமரை நொந்துரையாது அவன்வயிற் பரத்தைமை கூறும்.

காரணமாவன தலைவி  தோற்றப்பொலிவும்,  வருத்தமும்  அயலார்
கூறும் அலருமாம்.

உ-ம்:

“அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளிர் ரஞ்சியீர் ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனோ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்று
ஐதெமக் கம்ம மெய்தோய் நட்பே”           (குறுந்.401)

இது வேறுபாடு கண்டு இற்செறித்தமை தன்னுள்ளே கூறியது.

“பெருநீர் அழுவத் தெந்தை தந்த
கொடுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி
யெக்கர்ப் புன்னை இன்னிழ லசைஇச்
செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி
ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
தாழை வீழ்