நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5303
Zoom In NormalZoom Out


 

இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே.”      (குறுந்.355)

இஃது இரவுக்குறி வந்த தலைவனை நோக்கிக் கூறியது.

“கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்சல் ஓம்பி ஆர்பதங் கொண்டு
நின்குறை முடித்த பின்றை என்குறை
சொல்லல் வேண்டுமாற் கைதொழு திரப்பல்
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு
நின்கிளை மருங்கிற் சேறி யாயின்
அம்மலை கிழவோற் குரைமதி இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனல் காவ லாயின ளெனவே.”              (நற்.102)

எனவும்,

“ஓங்கல் இறுவரைமேற் காந்தள் கடிகவினப்
பாம்பென வோடி யுருமிடித்துக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போலான்
நீங்கும் நெகிழ்ந்த வளை.”              (திணை.ஐம்.3)

எனவும்,

“மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுவந்துமந்தி முலைவருடக் - கன்றமர்ந்து
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப் பிரிவ திலம்.”              (ஐந்திணை எழு.4)

“அவருடை நாட்ட வாயினு மவர்போற்
பிரிதல்தேற்றாப் பேரன் பினவே
உவக்கா ணென்று முள்ளுவ போலச்
செந்தார்ச் சிறுபெடை தழீஇப்
பைங்குர லேனற் படர்தருங் கிளியே.”

இது பகற்குறிக்கண் தலைவனீட ஆற்றாது தோழிக்குக் கூறியது.    (20)

தலைவிகூற்று இன்னவாறுமாமெனல்

105. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந்
தானே கூறுங் காலமும் உளவே.

இதுவும் அதிகாரத்தன் தலைவிகூற்று இன்னவாறுமாம் என்கின்றது.

(இ-ள்.)  வரைவிடைவைத்த   காலத்து   வருந்தினும்  -  வரைவு
மாட்சிமைப் படாநிற்கவும்  பொருள்காரணத்தான் அதற்கு இடையீடாகத்
தலைவன்   நீக்கி  வைத்துப்  பிரிந்த  காலத்துத்   தலைவி   வருத்த
மெய்தினும்:

ஆண்டுத் தோழி வினவாமலும்தானே கூறுமென்றான், ஆற்றுவித்துப்
பிரிதல்   களவிற்குப் பெரும்பான்மை  இன்மையின். வைத்த  வென்றது
நீக்கப்பொருட்டு.     வருந்துதல்      ஆற்றுவிப்பா     ரின்மையின்
வருத்தமிகுதலாம் .

வரையா  நாளிடை  வந்தோன்  முட்டினும் - வரையா தொழுகுந்
தலைவன் ஒருஞான்று தோழியையானும் ஆயத்தையானுஞ்