சிறந் தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவ னுள்வழிப் படினுந்
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே.
இது தலைவி கூற்றிற்குச்
சிறப்பில்லன கூறி அவையும்
அகப்பொருளாம் என்கின்றது.
(இ-ள்.)
உயிரினும் நாண் சிறந்தன்று - எல்லாவற்றினுஞ் சிறந்த
உயிரினும் மகளிர்க்கு நாண் சிறந்தது; நாணினுஞ் செயிர்தீர் கற்புக்காட்சி
சிறந்தன்று - அந்நாணினுங்
குற்றந்தீர்ந்த கற்பினை
நன்றென்று
மனத்தாற் காணுதல் சிறந்தது; எனத் தொல்லோர் கிளவி புல்லிய
நெஞ்சமொடு - என்று முன்னுள்ளோர் கூறிய கூற்றினைப் பொருந்திய
நெஞ்சுடனே; காமக்கிழவன் உள்வழிப்
படினும் - தலைவன்
இருந்தவிடத்தே தலைவி தானே செல்லினும்;
தாவில் நன்மொழி கிழவி
கிளப்பினும் - மனவலியின்றிச் செல்வாமெனக்
கூறும் நன்மொழியினைத்
தலைவிதானே கூறினும்;
பொருள் தோன்றும் - அவை
அகப்பொருளாய்த் தோன்றும்; ஆவகை பிறவும்மன் பொருள் தோன்றும்
- அக்கூற்றின் கூறுபாட்டிலே
பிற கூற்றுக்களும் மிகவும்
அகப்பொருளாய்த் தோன்றும் எ-று.
என்றது தலைவிகூற்று. சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக்
கற்புச்சிறப்ப
நாண்
துறந்தாலுங்குற்றம் இன்றென்றற்குச்
‘செயிர்தீ’ரென்றார்; ‘நன்மொழி’ யென்றார்
கற்பிற் றிரியாமையின்;
அவை இன்னோரன்னவழி நெஞ்சொடுகிளத்தல் போல்வன. இவள்
கூற்றுத் தோழிக்குந் தலைவற்குமே தோன்றுவதென்க.
மன்: ஆக்கம்,
இழிந்த பொருளும் உயரத்தோன்றலின்,
“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங்காணேன் மாண்தக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீர் இலங்குவளை ஞெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.”
(குறுந்.31)
யாண்டுங் காணேனென அவனை
வழிபட்டுக் கூறினமையிற்
கற்பின்பாலதாய்த் தோழியுந் தலைவனும்
பெண்டன்மை யிற்றிரியக்
கருதாது நன்குமதித்தவாறு காண்க.
“அருங்கடி யன்னை காவ னீவிப்
பெருங்கடை யிறந்து மன்றம் போகிப்
பகலே பலருங் காண நாண்விட்
|