டகல்வயற் படப்பை அவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி பன்னாள்
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பின்
வான்றோய் மாமலை நாடனைச்
சான்றோ யல்லை யென்றனம் வரற்கே.”
(நற்.365)
“கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
யீங்கிவ ணுறைதலும் உய்குவ மாங்கே
எழுவினி வாழியென் நெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நான்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நட்பே.”
(குறுந்.11)
இவை தோழிக்கும் நெஞ்சிற்குங் கூறியன.
“ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த
குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை
தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்
பாம்புமத னழியும் பானாட் கங்குலும்
அரிய அல்லமன் இகுளை பெரிய
கேழல் அட்ட பேழ்வா யேற்றை
பலாவமல் அடுக்கம் புலர ஈர்க்குங்
கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில்
படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பும் அவர்நாட்டு
எண்ணரும் பிறங்கன் மானதர் மயங்காது
மின்னுவிடச் சிறிய வொதுங்கி மென்மெலத்
துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால்
சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ
நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம்
அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே”
(அகம்.8)
என்னும் அகப்பாட்டும் அது.
இங்ஙனம் வந்துழியுங் கற்புச் சிறந்ததாம்.
இனிப் பிறவாற் கொள்வன வருமாறு:
“பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலுள்
நன்மலை நாடன் நலம்புனைய - மென்முலையாய்
போயின சின்னாள் புனத்து மறையினால்
ஏயினார் இன்றி இனிது”
(ஐந்திணை.ஐம்.11)
“கானலஞ் சிறுகுடிக் கடன்மேம் பரதவர்
நீனிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பத நோக்கி
அங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொடு
அலரே, யன்னை யறியி னிவணுறை வாழ்க்கை
அரிய வாகும் நமக்கெனக் கூறின்
கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கணநிரை கிளர்க்கு நெடுநெறிச் சகடம்
மணன்மடுத்து உரறும் ஓசைக் கழனிக்
கருங்கால் வெண்குருகு வெரூஉம்
இருங்கழிச் சேர்ப்பின்தம் இறைவ னூர்க்கே”
(நற்.4)
என வரும்.
“விழுந்த மாரிப் பெருந்தண் சாரற்
கூதிர்க் கூதளத் தலரி நாறும்
மாதர் வண்டின நயவருந் தீங்குரன்
மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர்வரை நாடற் குரைத்த லொன்றே
துயர்மருங் கறியா அன்னக் கிந்நோய்
தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ
செய்யா யாகலிற் கொடியை தோழி
மணிகெழு நெடுவரை யணிபெற நிவந்த
செயலை யந்தளி ரன்னவென்
மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே.”
(நற்.244)
இஃது அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத்
தலைவி கூறியது.
இன்னும்
|