அதனானே தோழியைத் தலைவி ஆற்றுவித்தலுங் கொள்க.
“ஞெகிழ்ந்த தோளும் வாடிய வரியுந்
தளிர்வனப் பிழந்தநின் றிறனும் நோக்கி
யாஞ்செய்வ தன்றிவள் துயரென அன்பிறில்
அழாஅல் வாழி தோழி வாழைக்
கொழுமட லகலிலைத் தளிதலைக் கலாவும்
பெருமலை நாடன் கேண்மை நமக்கே
விழும மாக அறியுநர் இன்றெனக்
கூறுவை மன்னோ நீயே
தேறுவென் மன்யா னவருடை நட்பே”
(நற்.309)
என வரும்.
“கூறுதல் அயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நல்தோள் மணந்த ஞான்றை மற்றவன்
தவாஅ வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே.”
(குறுந்.36)
இதுவும் அது.
22
தோழிகூற்று நிகழுமிடமிவையெனத் தொகுத்துக் கூறல்
107. நாற்றமுந் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியுஞ்
செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉம்
உணர்ச்சி யேழினு முணர்ந்த பின்றை
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானுங்
குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப்
பெருமையிற் பெயர்ப்பினும் முலகுரைத்தொழிப்பினும்
அருமையின் அகற்சியும் அவளறி வுறுத்துப்
பின்வா வென்றலும் பேதைமை யூட்டலும்
முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும்
அஞ்சியச் சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமோடு
எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும்
வந்த கிழவனை மாயஞ் செப்பிப்
பொறுத்த காரணங் குறித்த காலையும்
புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணுங்
குறைந்தவட் படரினு மறைந்தவ ளருகத்
தன்னொடும் அவளொடும் முதன்மூன் றளைஇப்
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்
நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்
எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும்
புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்
புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும்
ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணுஞ்
செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும்
என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ
அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்
ஆற்றது தீமை யறிவுறு கலக்கமுங்
காப்பின் கடு
|