நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5313
Zoom In NormalZoom Out


 

குன்றுகெழு நாடற்குங் கொடிச்சிக்கும்
ஒன்றுபோல் மன்னிய சென்றுவாழ் உயிரே.”

இதுவும் அது.

மெய்யினும்  பொய்யினும்  வழிநிலை  பிழையாது  பல்வேறு  கவர்
பொருள்   நாட்டத்தானும்   -   அங்ஙனம்   உணர்ந்தபின்   தோழி
தலைவியுடன் ஆராயுங்காற்  றன்மனத்து  நிகழ்ந்தனவற்றை  மறைத்துக்
கூறவேண்டுதலில்  உண்மைப்  பொருளானும்  பொய்ப்  பொருளானும்
விராவிவரினும்    அவட்குக்   குற்றேவல்    செய்யுந்    தன்மையின்
தப்பாதவாற்றான்   வேறுபல்    கவர்பொருள்   படக்கூறி   ஆராயும்
ஆராய்ச்சிக்கண்ணும்:

நாணான் இறந்து படாமற் கூறுதற்கு ‘வழிநிலை பிழையாது’ என்றார்.

பிறைதொழுவா   மெனவுங்,   கணைகுளித்த    புண்கூர்   யானை
கண்டனெனெனவும்,  தன்  பெருமைக்கு   ஏலாத  சிறு  சொற்  கூறிக்
குறைவுற்று நிற்கின்றான் ஒருவனுளன் அவனை நீயுங் காண்டல் வேண்டு
மெனவும், அவன்   என்னைத் தழுவிக்  கொண்டு  குறைகூறவும் யான்
மறுத்து  நின்றேனென்றாற்  போலவும்  மெய்யும்  பொய்யும்  விராயும்
பிறவாறாகவுங் கூறுவன பல்வேறு கவர்பொருளாம்.

உ-ம்:

“முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே
இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும்
பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற்
பெருகொளியான் மிக்க பிறை.”

இது பண்டு கூறியவாறு கூறலின் மெய்யும், பிறைதொழாமை அறிந்து
கூறலிற் பொய்யுமாய் வழிநிலை பிழையாத கவர்பொருளாயிற்று.

“பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட்
கண்டிக் களிற்றை யறிவன்மன் - தொண்டிக்
கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
உதிர முடைத்திதன் கோடு.”            (சிற்றெட்டகம்)

இது நடுங்க  நாட்டம்; இஃது இறந்துபாடு பயத்தலிற் கந்தருவத்திற்கு
அமையாது.

“தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித்
தெய்வங் கமழுமால் ஐம்பாலும் - ஐயுறுவல்
பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க்
கென்னை இதுவந்த வாறு”

என     வழிநிலை   பிழையாமற்   கவர்பெருளாக   நெறிபடுநாட்டம்
நிகழ்ந்தவழித்  தலைவி  சுனையாடினேற்கு  இங்ஙனம் ஆயிற்றென்னும்.
அது கேட்டுத் தோழியும் யானும் ஆடிக் காண்பல் என்னும்.

உ-ம்:

“பையுண் மா