லைப் பழுமரம் படரிய
நொவ்வுப்பறை வாவல் நோன்சிற கேய்க்கும்
மடிசெவிக்குழவி தழீஇப் பெயர்தந்து
இடுகுகவுண் மடப்பிடி யெவ்வங் கூர
வெந்திற லாளி வெரீஇச் சந்தின்
பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ்
உருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங்
கடுங்கண் யானை காலுற வொற்றலிற்
கோவா ஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு
பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை
தோளா ரெல்வளை தெளிர்ப்ப நின்போல்
யானு மாடிக் காண்கோ தோழி
வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேல்
திகழ்புண் முருகன் தீம்புன லலைவாய்க்
கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் களித்த
வொண்பொறி மஞ்ஞை போல்வதோர்
கண்கவர் காரிகை பெறுதலுண்டெனினே”
என வரும்.
“நெருந லெல்லை யேனல் தோன்றித்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச்
சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்
குளிர்கொள் தட்டை மதனில புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீமற்
றியாரை யோவெம் அணங்கியோய் உண்கெனச்
சிறுபுறங் கவையின னாக வதற்கொண்டு
இகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
உள்ளவ னறித லஞ்சி உள்ளில்
கடிய கூறிக் கைபிணி விடாஅ
வெரூஉமான் பிணையி னொரீஇ நின்ற
என்னுரத் தகைமையிற் பெயர்த்துப் பிறி தென்வயிற்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்
தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன் இன்றுந்
தோலாவா றில்லை தோழிநாஞ் சென்மோ
சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசின் றாதலு மறியா னேசற்
றென்குறைப் புறனிலை முயலும்
அண்க ணாளனை நகுகம் யாமே.”
(அகம்.32)
என்னும் அகப்பாட்டுங் கொள்க.
“எழாஅ வாகலின் எழினலந் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்
எறிபொற் பிதிரிற் சிறுபல தாஅய்
வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி
மயிலறி பறியா மன்னோ
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே.”
(நற்.13)
இது தலைவி வேறுபாடு கண்டு
ஆராயுந் தோழி தனது
ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது. ‘நாட்டத்தானும்’ என்னும் உம்மை
முற்று, நாட்ட மெல்லாந்
தழீஇயினமையின் ஆனுருபு இடப்
பொருட்டாம். அஃது இடமாக வருகின்ற
எட்டனையும் இடத்தியல்
பொருளாக உரைக்கவே அவளை நாடுகின்ற காலமும் மேல்வருகின்ற
எட்டனையுந் தலைவற்கு உரைக்குங்
காலமும் ஒருங்கு
நிகழுமென்பதாம். இங்ஙனம் நாடி மதியுடம்படுக்குந்
துணையுந்
தலைவற்கு இக்குறை முடிப்பல் என்னாது ஒழுகும்.
குறையுறற்கு எதிரிய கிழவனை
மறையுறப் பெருமையிற்
பெயர்ப்பினும் - இரவுவலியுற்றுக் குறைகூறத்
தொடங்கிய தலைவனைத்
தோழி தான் இவ் வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத்
|