நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5315
Zoom In NormalZoom Out


 

தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றினும்:

தான்    அறிந்ததனை    மறைத்துக்   கூறுதலன்றி  அன்பின்மை
ஒருதலையாக உடையளல்லள்.

உ-ம்:

“கல்லோங்கு சாரற் கடி புனங் காத்தோம்பு
நல்கூர்ந்தார் மாட்டு நயந்தொழுகித் - தொல்வந்த
வான்றோய் குடிக்கு வடுச்செய்தல் தக்கதோ
தேன்றோய்பூங் கண்ணியீர் நீர்”

“மறுவொடு பட்டன மாமலை நாட
சிறுகுடியோர் செய்வன பேணார் - சிறுகுடிக்கு
மூதான் புறத்திட்ட சூடே போல் நில்லாதே
தாதாடு மார்ப பழி.”

“தகைமான் சிறப்பிற் சான்றோர்க் கொத்த
வகையமை வனப்பினை யாகலின் உலகமொடு
பாற்படற் பாலை மன்னோ காப்புடுத்து
ஓங்குய ரடுக்கத்துச் சார்ந்துவளர் நனந்தலை
நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோர்
இன்னர் என்னா தின்பம் வெஃகிப்
பின்னிலை முயற்சியின் வருந்தினும்
நும்மோர் அன்னோர்க்குத் தகுவதோ வன்றே.”

என வரும்.

“இவளே, கான னண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பெருங்கடல் கலங்கவுள் புக்கு
மீனெறி பரதவர் மகளே, நீயே
நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க்
கடுந்தோர்ச் செல்வன் காதன் மகனே
நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதுஞ் செலநின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ வன்றே
யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே.”          (நற்.45)

இதுவும் அது.

உலகு    உரைத்து ஒழிப்பினும் - அவ்வொழுக்கம் அறியாள் போற்
கரந்த  தோழி  உலகத்தாரைப்போல்  வரைந்து  கொள்ளெனக்  கூறித்
தலைவனை நீக்கினும்:

உ-ம்:

“கோடீ ரெல்வளைக் கொழுமணிக் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயிற்
றெண்கழிச் சேயிறாப் படூஉந்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ”  (ஐங்குறு.196)

அருமையின் அகற்சியும்  -  அவை  கேட்டுப்  பிற்றை  ஞான்றும்
வந்தவன்மாட்டுச்  சிறிது  நெஞ்சுநெகிழ்ந்த  தோழி அங்ஙனங்  கூறாது
இவள் அரியளெனக் கூறுதலும்:

இருவருமுள்வழி  யவன்வர வுணர்தலின் இருவருள்ளமும் உணர்ந்து
அங்ஙனங் கூறினாள்.

“நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப்
புதுவை யாகலிற் கிளத்த னாணி
நேரிறை வளைத்தோணின் றோழி செய்த
ஆரஞர் வருத்தங் களையா யோவென
வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை
யெம்பதத் தெளிய ளல்ல ளெமக்கோர்
கட்காண் கடவு ளல்லளோ பெரும
வாய்கோன் மிளகின் அமலையங் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும்
மஞ்சுசூழ் மணிவரை மன்னவன்மகளே.”     (பொருளியல்)

“தழையொடு தண்கண்ணி தன்மையாற் கட்டி
விழையவுங் கூடுமோ வெற்ப - விழையார்ந்
திலங்கருவி பொன்கொ