அ யவ்வயி றலைத்தலின் ஆனா
தாடுமழை தவழுங் கோடுயர் பொதியின்
ஓங்கிருஞ் சிலம்பிற் பூத்த
காத்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே” (நற்.379)
என வரும்.
முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்து
உரைத்தலும் - அங்ஙனம்
பேதைமை யூட்டியவழி இவள்
இக்குறை முடிப்பளென்று இரந்து
ஒழுகினேற்கு இவள் புணர்ச்சி யறிந்திலள் போற் கூறினாளென
ஆற்றானாயவனை யான் அப்புணர்ச்சி நிகழ்ந்தமை அறிவலென்று கூறி
வருத்தந் தீர்த்தலும்.
உ-ம்:
“நறுந்தண் கூந்தற் குறுந்தொடி மடந்தை
சிறுமுதுக்குறைவி யாயினள் பெரிதென
நின்னெதிர் கிளத்தலு மஞ்சுவல் எனக்கே
நின்னுயிர் அன்னள் ஆயினுந்
தன்னுறு விழுமங் கரத்த லானே.”
நின்னெதிர் கிளத்தல் அஞ்சுவல் நீ அவட்கு உரைத்தியெனக் கருதியென்றலிற் புணர்ச்சி யுணர்ந்தமை கூறினாள்.
அஞ்சி அச்சு உறுத்தலும் - அங்ஙனம் ஆற்றுவித்துங் கடிது குறை முடியாமையைக்
கருதுந் தோழி குரவரைத் தான் அஞ்சித் தலைவியும் அவரை அஞ்சுவளெனக் கூறுலும்:
அஞ்சுதல் அச்சென்றாயிற்று. இவ்வச்சங் கூறவே அவன் ஆற்றும்.
உ-ம்:
“யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்
கரும்பு மருண்முதல பைந்தாட் செந்தினை
மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற்
படுகிளி கடிகஞ் சேறு மடுபோ
ரெஃகுவிளங்கு தடக்கை மலயன்கானத்து
ஆரம் நாறு மார்பினை
வாரன்மற் றைய வருகுவள் யாயே.”
(குறுந்.198)
இது யாயை அஞ்சியது.
“யானை யுழலும் அணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
ஏனலுள் ஐய வருதன்மற் றென்னைகொல்
காணினுங் காய்வர் எமர்.”
(திணை.ஐம்.6)
இது தமரை அஞ்சிக் கூறியது.
உரைத்துழிக் கூட்டமோடு எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும் - ஆயத்தினீங்கித்
தன்னோடு நின்ற தலைவியை அவனொடு கூட்ட
வேண்டி அவளினீங்கித் தலைவற்கு இன்னுழி
எதிர்ப்படுதியென
உரைத்த விடத்துக் கூடுங் கூட்டத்தோடே
ஒழியா
|