ற் கண்டிகும் யாமே.”
(ஐங்குறு.198)
என வரும்.
மறைந்தவள் அருக - நாண் மிகுதியான் தனது வேட்கை மறைந்த தலைவி
அக்கூற்றிற்கு உடம்படாது நிற்றலால்;தன்னொடும் அவளொடும் முதன்
மூன்று அளைஇ - தலைவனோடுந் தலைவியோடும் நிகழ்ந்த இயற்கைப்
புணர்ச்சி முதலிய மூன்றனையுந் தான் அறிந்தமை குறிப்பான் உணர்த்தி; பின்னிலை பல்வேறு நிகழும் மருங்கினும்-இரந்து
பின்னிற்றல் பலவாய் வேறுபட்டு நடக்குமிடத்தும்:
அவை பெருந்தன்மையானொருவன் யானை முதலியன வினாயுந் தழையுங்
கண்ணியுங் கொண்டும் இப்புனத்து வாரா நின்றானெனவும்,
அவன் என்மாட்டுப் பெரிதுங் குறையுடைய
னெனவும், அவன்
குறைமுடியாமையின் வருந்தாநின்றானெனவும், அத்தழை
நீ ஏற்றல்
வேண்டுமெனவும், அக்குறை முடித்தற்கு
இஃதிடமெனவும், யான்
கூறியது கொள்ளாயாயின் நினக்குச்
செறிந்தாருடன் உசாவிக்
குறை முடிப்பாயெனவும், மறுப்பின் அவன்
மடலேறுவனெனவும்,
வரை பாய்வனெனவும், பிறவாற்றானுங் கூறிக் குறைநயப்பித்தலாம்.
உ-ம்:
“புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் சாரல்
தினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவல் உற்றதொன்றுண்டு.” (ஐந்திணை ஐம்.14)
“கைதையந் தண்கானற் காலையும் மாலையும்
எய்த வரினும் இதுவெங் குறையென்னான்
செய்தழையுங் கண்ணியுஞ் சேர்ந்துழி வைத்திறந்தான்
உய்யலன் கொல்லோ வுணரலனே யென்றியால்.”
“ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே.”
(குறுந்.176)
“புணர்துணையோ டாடும் பொறியலவ னோக்கி
இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரியைம்
|