நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5321
Zoom In NormalZoom Out


 

பாலோய் வண்ண முணரேனால்.”        (சிலப்.கானல்.31)

“ஓரை யாய மறிய வூரன்
நல்கினன் தந்த நறும்பூந் தண்டழை
மாறுபடி னெவனோ தோழி வீறுசிறந்து
நெடுமொழி விளக்குந் தொல்குடி
வடுநாம் படுத்தல் அஞ்சுதும் எனவே.”

இது கையுறை ஏற்பத் தலைவிக்குக் கூறியது.

“சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக்
கன்றுதாய் மருளுங் குன்ற நாடன்
உடுக்குந் தழைதந் தனனே யவையாம்
உடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற்
கேளிடைக் கேடஞ் சுதுமே யாயிடை
வாடுப கொல்லோ தாமே யவன்மலைப்
போருடை வருடையும் பாயாச்
சூருடை யடுக்கத்த கொயற்கருந் தழையே.”      (நற்.359)

இதுவும் அது.

“இலைசூழ்செங் காந்தள் எரிவாய் முகையவிழ்த்த வீர்ந்தண்
                                         வாடை
கொலைவேல் நெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்ற
                                         நாடன்
உலைவுடை வெந்நோ யுழக்குமால் அந்தோ
முலையிடை நேர்பவர் நேரும் இடமிது மொய்குழலே.”

“அவ்வளை வெரிநி னரக்கீர்த் தன்ன
செவ்வரி யிதழ சேணாறு பிடவின்
நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம்
வளமலை நாடன் நெருநல் நம்மொடு
கிளைமலி சிறுதினைக் கிளிகடிந் தசைஇச்
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
அல்லன் அன்றது காதலந் தோழி
தாதுண் வேட்கையிற் போதுதெரிந் தூதா
வண்டோ ரன்னவவன் தண்டாக் காட்சி
கண்டுங் கழறொடி வலித்தவென்
பண்பில் செய்தி நினைப்பா கின்றே.”           (நற்.25)

“மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலைக் கிழவோன் நம்நயந் தென்றும்
வருந்தின னென்பதோர் வாய்ச்சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எணணி
அறிவறிந் தளவல் வேண்டு மறுத்தரற்
கரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே.”         (நற்.32)

“மறவல் வாழி தோழி துறைவர்
கடல்புரை பெருங்கிளை நாப்பண்
மடல்புனைந் தேறிநிற் பாடும் பொழுதே.”