பெயல் தலைஇய இனப்பல் கொண்மூத்
தவிர்வில் வெள்ளந் தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யுங் கடுஞ்சுழி நீத்தம்
புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன்
வெண்கோட் டியானை விளிபடத் துழவும்
அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலு மஞ்சும் பனிக்கடுஞ் சுரனே.”
(அகம்.68)
இது, தாயது துயிலுணர்நது தலைவன் வந்தமை தோழி தலைவிக்குக்
கூறிக் குறிவயிற்சென்றது.
“சேய்விசும் பிவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறைபுலம் பின்றே
இறவருந்தி யெழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்குவட் டருஞ்சிறைத் தாஅய்க் கரைய
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே
கணைக்கான் மாமலர் கரப்ப மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கி னெவனோ தெய்ய பொங்குபிசிர்
முழவிசைப் புணரி யெழுதரும்
உடைகடற் படப்பையெம் முறைவி னூர்க்கே.”
(நற்.67)
இஃது இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது.
“ஆம்பல் நுடங்கும் அணித்தழையும் ஆரமுந்
தீம்புனல் ஊரன் மகளிவள் - ஆய்ந்தநறுந்
தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்
தாமரை தன்னையர் பூ.”
(திணை.ஐம்.40)
இஃது இரவுக்குறி நேர்ந்த தோழி இந்நிலத்தினைகண்
நீ வருங்கால் இன்னபெற்றியான் வருவாயாகவென்றது.
“கடற்கானற் சேர்ப்ப கழியுலாஅய் நீண்ட
அடற்கானற் புன்னைதாழ்ந் தாற்ற - மடற்கானல்
அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்தே
முன்றில் இளமணன்மேன் மொய்த்து”
(திணை.நூற்.5)
இஃது இரவுக்குறியிடங் காட்டித் தோழி கூறியது.
“எம்மூர் வாயில் ஒண்டுறைத் தடைஇய
கடவுண் முதுமரத் துடனுறை பழகிய
தேயா வளைவாய்த்
|