நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5327
Zoom In NormalZoom Out


 

தெண்கட் கூருகிர்
வாய்ப்பறை யசாவும் வலிமுந்து கூகை
மையூன் றெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கையெங் காதலர் வரனசைஇத்
துஞ்சா தலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே.”          (நற்.83)

இஃது இரவுக்குறிவந்த  தலைவன்    சிறைப்புறமாகக்    கூகைக்கு
உரைப்பாளாய்த் தோழி கூறியது.

“நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத் தன்ன விடனுடை வரைப்பில்
பாவை யன்ன நிற்புறங் காக்குஞ்
சிறந்த செல்வத் தன்னையுந் துஞ்சினள்
கெடுத்துப்படு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு
நன்மார் படைய முயங்கி மென்மெலக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
கீழு மேலுங் காப்போர் நீத்த
வறுந்தலைப் பெருங்களிறு போலத்
தமியன் வந்தோன் பனியலை நிலையே.”        (நற்.182)

இது தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ என்றது.

வேண்டாப்  பிரிவினும்  -  தலைவன்றான் புணர்ச்சியை விரும்பாது
பிரிவை  விரும்பிய இடத்தும்:

அப்பிரிவு தண்டாதிரத்தலை முனிந்த மற்றையவழி ‘இட்டுப் பிரிவும்
அருமைசெய்   தயர்த்தலு’    (111)    மாம்;   ஆண்டுத் தலைவற்குந்
தலைவிக்குங் கூறுவன கொள்க.

உ-ம்:

“முத்தம் அரும்பு முடத்தாண் முதிர்புன்னை
தத்துந் திரையலைக்குந் தண்ணங் கடற்சேர்ப்ப
சித்திரப் பூங்கொடியே யன்னாட் கருளீயாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு.”          (திணை.ஐம்.42)

“இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்புமுதிர்பு
நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி
விழவுக்களங் கமழு முரவுநீர்ச் சேர்ப்ப
இனமணி நெடுந்தேர் பாக னியக்கச்
செலீஇய சேறி யாயி னிவளே
வருவை யாகிய சின்னாள்
வாழ்வா ளாதல் அறிந்தனை சென்மே.”         (நற்.19)

இது பிரிவு வேண்டியவழிக் கூறியது.

“சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற்
பெருந்தே னிறாலொடு சிதறுநாடன்
பேர