மர் மழைக்கண் கலுழத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லு மன்னாய்.”
(ஐங்குறு.214)
எனவும் வரும்.
வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும்-
தலைவற்குத் தாஞ்
சில கொடுத்தலைத் தலைவி வேண்டியவிடத்தும்:
அது தலைவி ‘வேளா ணெதிரும் விருந்தின்கண்’ (107)
தோழி கூறுவதாம்.
உ-ம்:
“பன்னாள் எவ்வந் தீரப் பகல்வந்து புன்னையம்
பொதும்பின் இன்னிழற் கழிப்பி மாலை
மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்து வவன்
வண்டேர் இயக்க நீயுஞ் செலவுவிருப் புறுதல்
ஒழிகதில் அம்ம செல்லா நல்லிசைப்
பொலம்பூண் திரையன் பல்பூங் கானற்
பவத்திரி யனவிவள் நல்லெழில் இளநலந்
தொலைய வொல்லெனக் கழியே யோத மல்கின்று
வழியே வள்ளெயிற் றரவொடு வயமீன் கொட்குஞ் சென்றோன்
மன்ற மான்றின்று பொழுதென நின்றிறத் தவலம்
வீட இன்றிவண் சேப்பின் எவனோ பூக்கேழ்
புலம்ப பீன் நொடுத்த வெண்ணென்மாத்
தயிர்மிதி மிதவை மாவார் குநவே நினக்கே வடவர்
தந்த வான்கேழ் வட்டம் குடபுல வுறுப்பிற்
கூட்டுபு நிகழ்த்திய வண்டிமிர் நறுஞ்சாந்
தணிகுவந் திண்டிமில் எல்லுத் தொழின்மடுத்த
வல்வினைப் பரதவர் கூர்வளிக் கடுவிசை
மண்டலிற் பாய்ந்துடன் கோட்சுறாக் கிழித்த
கொடுமுடி நெடுவலை தண்கட லசைவளி யெறிதொறும்
வினைவிட்டு முன்றிற் றாழைத் தூங்குந் தெண்டிரைப்
பரப்பினெம் உறைவின் ஊர்க்கே” (அகம்.340)
இதனுள் தனக்கும் புரவிக்கும் கொடுப்பன
கூறித்தடுத்தவாறு காண்க.
“நாள்வலை முகந்த” (அகம்.300) என்பதும் அது.
புணர்ந்துழி உணர்ந்த அறிமடச்சிறப்பினும் -
இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தகாலத்து அவன்
தீங்கு உணராது, அவனை நன்றாக உணர்ந்த அறிவினது
மடப்பங்கூறித் தங்காதற்சிறப்பு உரைத்த
இடத்தும்:
உ-ம்:
“சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின் தெற்றென
இறீஇயரோ வைய மற்றியாம் நும்மொடு நக்க
வால்வெள் ளெயிறே பாணர் பசுமீன் சொரிந்த
மண்டைபோல் எமக்கும் பெரும்புல வாகி நும்மும்
|