யின் என்பரம்
ஆகுவ தன்றிவள் அவலம் நாகத்
தணங்குடை அருந்தலை யுடலி வலனேர்பு
ஆர்கலி நல்லேறு திரிதருங்
கார்செய் மாலை வரூஉம் போழ்தே.”
(நற்.37)
இது, வரைவிடைப் பிரிகின்றான்
ஆற்றவித்துக் கொண்டிரு
என்றாற்குத் தோழி கூறியது.
செங்கடு மொழியாற் சிதைவுடைத்தாயினும்-தோழி செவ்வனங் கூறுங்
கடுஞ்சொற்களான் தலைவி நெஞ்சு சிதைவுடைத் தாயினும்: ஆண்டுந்
தோழிமேன கிளவி.
அவை தலைவனை இயற்பழித்தலுந் தலைவியைக் கழறலுமாம்.
உ-ம்:
“கௌவையும் பெரும்பழி தூற்ற னலனழிந்து
பைதலஞ் சிறுநுதல் பசலை பாய
நம்மிற் படுத்த அவரினும் அவர்நாட்டுக்
குன்றங் கொடியகொல் தோழி
ஒன்றுந் தோன்றா மழைமறைந் தனவே.”
இது வரைவிடைப் பருவங்கண்டு அழிந்த தோழி இயற்பழித்தது.
“மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த இரும்பிணர்த் துறுகல்
பைத லொருதலை சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே”
(குறுந்.13)
“கேழல் உழுத கரிப்புனக் கொல்லையுள் வாழை முதுகாய் கடுவன் புதைத்தயருந்
தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழி
நேர்வளை நெஞ்சூன்று கோல்.”
(ஐந்திணை எழு,11)
இஃது அவன் சூளுறவு பொய்த்ததென இயற்பழித்தது.
“மகிழ்நன் மார்பே வெய்யை யால்நீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.”
(குறுந்.73)
“மெய்யில் தீரா மேவரு காமமோடு
எய்யா யாயினு முரைப்பல் தோழி
கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே
அருவி யான்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றிய பலவே நீயே
முருகு முரண்கொள்ளுந் தேம்பாய் கண்ணிப்
பரிபன் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலோ டமைந்தனை யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்தெழுந்து
கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி
ஆங்காங் கொழுகா யாயி னன்னை
சிறு
|