நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5332
Zoom In NormalZoom Out


 

வின் பயங்கெழு கொல்லி
நிலைபெறு கடவு ளாக்கிய
பலர்புகழ் பாவை யன்னநின் னலனே.”       (அகம்.209)

“அழிய லாயிழை யிழிபுபெரி துடையன்
பழியு மஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலயிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
தங்குதற் குரிய தன்றுநின்
அங்கலுழ் மேனிப் பாஅய பசப்பே.”         (குறுந்.143)

என்னும் குறுந்தொகையுங் கொள்க.

“பெருங்கை யிருங்களி றைவன மாந்திக்
கருங்கான் மராம் பொழிற் பாசடைத் துஞ்சுஞ்
சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை
பொருந்தினார்க் கேமாப் புடைத்து.”   (ஐந்திணை எழு.12)

இவை இயற்பட மொழிந்து வற்புறுத்தன. இன்னும் ‘அன்பு தலையடுத்
வன்புறை’ என்றதனாற் பிறவுங் கொள்க.

“பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக்
கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுற் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோ டியம்ப நுண்பனி யரும்பக்
கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்
தவல நெஞ்சினம் சினம்பெயர வுயர்திரை
நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்ப
னொடுதேர் நுண்ணுக நுழைத்த மாவே.”         (நற்.58)

இது, பகற்குறி  வந்து  போகின்ற  தலைவன்  புறக்கிடை  நோக்கி ஆற்றாத தலைவி குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தது.

“விளையா டாயமொ டோரை யாடா
திளையோ ரில்லிடத் திற்செறிந் திருத்தல்
அறனு மன்றே யாக்கமுந் தேய்மெனக்
குறுநுரை சுமந்து நறுமல ருந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண வாடுகம்
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே
செல்கென விடுநண்மற் கொல்லோ வெல்லுமிழ்ந்
துரவுரு முரறு மரையிரு ணடுநாட்
கொடிநுடங் கிலங்கின மின்னி
ஆடுமழை யிறுத்தன்றவர் கோடுயர் குன்றே.”     (நற்.68)

இது,   வரைவுநீட  ஆற்றாத  தலைவி  வேறுபாடு  புறத்தார்க்குப்
புலனாகாமையும் இயையும், இங்ஙனங் கூறுவாரைப்  பெறினெனக்  கூறி
வற்புறுத்தது.

“மறுகுபு புகலு நெஞ்ச நோயின்
றிறுகப் புல்லி முயங்குகஞ்
சிறுபுன் மாலை செயிர்ப்ப நாமே.”