நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5335
Zoom In NormalZoom Out


 

விளவு நாமெண்ணப் பாத்தித் - தினவிளய
மயார் தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு
கயார் பிரிவித்தல் காண்.”                (திண.நூற்.5)

இஃ இவ்வொழுக்கத்தின வேங்க நீக்கிற்றெனத் தலவிக்குக்  கூறிய.
இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.

“புன்னையம் பூம்பொழிலே போற்றவே பாதுகா
அன்னப் பெடையே யறமறவல் - மன்னுங்
கடும்புதர்மான் காவலி கானலஞ் செல்லூர்
நெடுங்கடலே நீயு நினை.”

இது, புனங் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தோழி கூறியது.

“பண்டைக்கொ ணல்வினை யில்லேம் பதிப்பெயர்துங்
கண்டற் குலங்காள் கழியருகேர் - முண்டகங்காள்
நாணி யிராதே நயந்தங் கவர்க்குரைமின்
பேணி யவர்செறித்த லான்.”

இது, தலைவற்குக் கூறுமினென்றது.

களனும்  பொழுதும்  வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி உளப்பட
(காதன்  மிகுதி  உளப்படக்  களனும்  பொழுதும் வரைநிலை விலக்கி)
அவளிடத்துக்காதன் மிகுதி  மனத்து  நிகழாநிற்க இருவகையிடத்தையும்
இருவகைக் காலத்தையுந் தாம் வரைந்து கூறும் நிலைமையைத் தவிர்த்து
அவன் வயின் தோன்றிய  கிளவியையும்;  பிறவும்  -  கூறியவாறன்றிப்
பிறவாறாக   அவன்  வயின்  தோன்றிய  கிளவியையும்; நாடும் ஊரும்
இல்லுங்  குடியும்  பிறப்பும்  சிறப்பும்  இறப்ப  நோக்கி அவன் வயின்
தோன்றிய கிளவியொடு தொகைஇ -  அவன்  பிறந்த  நாடும்  அதன்
பகுதியாகிய   குடியிருப்பும்   அவ்வூர்க்கு   இருப்பாகிய   மனையும்
பார்ப்பார் முதலிய நால்வகை வருணமும் அவ்வருணத்துள்  இன்னவழி
இவனென்றலும் ஒரு வயிற்றுப் பிறந்தோர்   பலருள்ளுஞ்  சிறப்பித்துக்
கூறலும் பிறரின்   ஒவ்வாதிறந்தனவாதல்  நோக்கித்  தலைவனிடத்தே
தோழி கூறிய கிளவியோடே கூடி; அனைநிலை வகையான்   வரைதல்
வேண்டினும்  -  அத்தன்மைத்தாகிய  நிலைமையின்  கூறுபாட்டானே
வரைந்து கோடலை விரும்பிய வழியும்: தோழிமேன கிளவி.

‘பகற்   புணர்   களனே’   (தொல். பொ. 132)    ‘இரவுக்குறியே’
(தொல்.பொ.131)‘  குறியெனப்  படுவது’  (தொல்.பொ.130)    என்னுஞ்
சூத்திரங்களாற் களனும்  பொழுதும் உணர்க.

உ-ம்:

“புன்னை காத்தும் அன்னம் ஓப்பியும்
பனியிருங் கானல் யாம்விளை யாட