நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5389
Zoom In NormalZoom Out


 

போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென்
ஆருயிர் நிற்குமா றியாது.”                   (கலி.89)

என ஆற்றாமை மிகுதியாற் சென்றமை கூறியவாறு காண்க.

கைவிடின்  அச்சமும்  -  தலைவி தான் உணர்த்தவும் உணராமல்
தன்னைக் கைவிட்டுப் பிரியில் தான்  அவளை  நீங்குதற்கு  அஞ்சிய
அச்சத்தின்கண்ணும்: தலைவற்குக் கூற்று நிகழும்.

அஃது உணர்ப்புவயின் வாரா வூடலாம்.

“எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்று

இனைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.”        (குறுந்.19)

இதனுள்  அவளையின்றி   வருந்துகின்ற  நெஞ்சே அவள் நமக்கு
யாரெனப் புலத்தலன்றி ஆண்டுநின்றும்    பெயர்தல்    கூறாமையிற்
கைவிடின் அச்சமாயிற்று.

தான்   அவட்   பிழைத்த   நிலையின்கண்ணும்   -  தலைவன் 
தலைவியைப் பிழைத்த பிரிவின்கண்ணும்:

‘பிழைத்த’ வென்றார் ஆசிரியர், இயற்கைப்புணர்ச்சி   தொடங்கிப்
பலகாலும் பிரியேனெனத் தெளிவித்ததனைத் தப்பலின்.

உ-ம்:

“அன்பும் மடனுஞ் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்குங் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொ டோராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளைப்
புதலிவ ராடமைத் தும்பி குயின்ற
அகலா அந்துளை கோடை முகத்தலின்
நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல்
ஆய்க்குழற் பாணியின் ஐதுவந் திசைக்குந்
தேக்கமழ் சோலைக் கடறோங் கருஞ்சுரத்து
யாத்த தூணித் தலைதிறந் தவைபோல்
பூத்த இருப்பைக் குழைபொதி குவியிணர்
கழறுளை முத்திற் செந்நிலத் துதிர
மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனை
புயலென ஒலிவருந் தாழிருங் கூந்தல்
செறிதொடி முன்கைநங் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே.”  (அகம்.225)

இது நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது.

“வயங்கு மணிபொருத” என்ப