நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5390
Zoom In NormalZoom Out


 

தும் அது. (அகம்.166)

(உடன்சேறல்  செய்கையொடு  அன்ன  பிறவும்  மடம்பட  வந்த
தோழிக்கண்ணும்)   (101)   அன்னவும்   பிற  (102)  -  நீ  களவில்
தேற்றிய   தெளிவகப்படுத்தலுந்    தீராத்   தேற்றமும்   பொய்யாம்;
செய்கையொடு     உடன்சேறல்    -   அவை     பொய்யாகாதபடி
செய்கைகளோடே   இவளை   உடன்கொண்டு    செல்க;   மடம்பட
வந்த தோழிக்கண்ணும்  -  என்று தன்னறியாமை தோன்றக் கூறிவந்த
தோழிக்கண்ணும்: கூற்று நிகழும்.

உடன் கொண்டு போதன் முறைமையன்றென்று அறியாமற் கூறலின்
‘மடம்பட’ வென்றார். செய்கைகளாவன தலைவன் ‘கைபுனை வல்வில்’
நாண்  ஊர்ந்தவழி  இவள் ‘மையில் வாண்முகம் பசப்பூர்’தலும் அவன்
‘புனைமாண்  மரீஇய   அம்பு’  தெரிந்தவழி   இவள்   ‘இனைநோக்
குண்கண்ணீர் நில்லா’மையும் (கலி.7) பிறவுமாம்.

“பாஅலஞ்செவி” என்னும் பாலைக்கலியுள்,

“ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையுள்
நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ”     (கலி.5)

எனவும்,

“அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே” (கலி.5)

எனவும்,    உடன்கொண்டு   சென்மினெனத்   தோழி  கூறியது
கேட்ட தலைவன் இவளை உடன்கொண்டு  போதல்  எவ்வாற்றானும்
முறைமை   யன்றென்று    தோழிக்குக்   கூறுவனவும்  நெஞ்சிற்குக்
கூறுவனவும்  பிறவுங் கொள்க.

“வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கையள் எம்மொ டுணீஇய
வருகதில் லம்ம தானே
யளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே.”   (நற்.56)

இது தோழி கேட்பக் கூறியது.

“நாண்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல்
வேனி னீடிய வானுயர் வழிநாள்
வறுமை கூறிய மன்னீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடி கயந்தலை மண்ணிச்
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொறிபுற முரிஞிய நெறியயன் மராஅத்
தல்குறு வரிநிழ லசைஇய நம்மொ