நீ துணிந் ததுவே.” (நற்.103)
இது வேறுபட்டு மீட்டுவரவு ஆய்ந்தது.
“ஆள்வழக் கற்ற பாழ்படு நனந்தலை
வெம்முனை யருஞ்சுரம் நீந்தி நம்மொடு
மறுதரு வதுகொல் தானே செறிதொடி
கழிந்துகு நிலைய வாக
ஒழிந்தோள் கொண்டவென் உரங்கெழு நெஞ்சே.
(ஐங்குறு.329)
இது மீளலுறும் நெஞ்சினை நொந்து
தலைவன் உழையர்க்கு
உரைத்தது.
“நெடுங்கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே யினியே
யொண்ணுத லரிவையை யுள்ளுதொறுந்
தண்ணிய வாயின சுரத்திடை யாறே. ” (ஐங்குறு.322)
இஃது இடைச்சுரத்துத் தலைவி குணம்
நினைந்து இரங்கியது.
இன்னும் ‘இரட்டுறமொழித’ லென்பதனாற்
செய்வினை முற்றி
மீண்டு வருங்கால் வருந்தி நெஞ்சொடு கூறுவனவும் பிறவுங் கொள்க.
அது,
“என்றுகொல் எய்தும் ஞான்றே சென்ற
வளமலை நாடன் மடமகள்
இளமுலை ஆகத் தின்னுயிர்ப் புணர்ப்பே”
“கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
செப்பட ரன்ன செங்குழை யகந்தோ
றிழுதி னன்ன தீம்புழற் றுய்வா
யுழுதுகாண் டுளைய வாகி யார்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்
துப்பி னன்ன செங்கோட் டியவின்
நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்க்
கொடுநுண் ணோதி மகளிர் ஓக்கிய
தொடிமா ணுலக்கைத் தூண்டுரற் பாணி
நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங்
குன்றுபி னொழியப் போகியுரந் துரந்து
ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது
துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்துவல் எய்திப் பன்மாண்
ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக்
கைகவியாச் சென்று கண்பு

|