நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5395
Zoom In NormalZoom Out


 

றத்தொடு பொருந்திய வுலகுதொழிற் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீ ரவல்வர
நாநவில் பல்கிளை கறங்க நாவுடை
மணியொலி கேளாள் வாணுத லதனால்
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல்புக் கறியுந ராக மெல்லென
மண்ணாக் கூந்தன் மாசறக் கழீஇச்
சில்போது கொண்டு பல்குர லழுத்திய
அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ
அவிழ்பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலயே.”            (நற்.42)

இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது.

“ஊர்க பாக வொருவினை கழிய”              (அகம்.44)

“செல்க தேரே நல்வலம் பெறுந”           (அகம்34;374)

எனவும் வரும்.

“தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ
... ... ... ...
தாள்வளம் படவென்ற தகைநன்மா மேல்கொண்டு” (கலி.31)

என  வருவன  தலைவி கூற்றாதலின் தலைவன் மீண்டு வருங்காற்
பாகற்கே கூறுவனென்றார்.

(காமக்கழித்தி  மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய
எதிரும்)   காமக்கிழத்தி    மனையோளென்றிவர்  சொல்லிய  ஏமுறு
கிளவி எதிரும்  -   இற்பரத்தை   தலைவியென்று   கூறிய  இருவர்
சொல்லிய வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத்தும்: கூற்று நிகழ்த்தும்.

அவை  ‘அருஞ்சுரத்து  வருத்தம்  உற்றீரே’  எனவும்’  ‘எம்மை
மறந்தீரே’ எனவுங் கூறுவனவும் பிறவுமாம்.

“எரிகவர்ந்த துண்ட என்றூழ் நீளிடை
அரிய ஆயினும் எளிய அன்றே
அவவுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக்
கடுமான் திண்தேர் கடைஇ
நெடுமா னோக்கிநின் உள்ளியாம் வரவே.”   (ஐங்குறு.360)

இது வருத்தம் உற்றீரே என்பதற்குக் கூறியது.

“தொடங்குவினை தவிரா அசைவில் நோன்றாள்
கிடந்துயிர் மறுகுவ தாயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த
தாவி லுள்ளந் தலைத்தலைச் சிறப்பச்
செய்வினைக் ககன்ற காலை யெஃகுற்று
இருவே றாகிய தெரிதகு வனப்பின்
மாவி னறுவடி போலக் காண்டொறும்
மேவல் தண்டா மகிழ் நோக் குண்கண்
நினையாது