நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5396
Zoom In NormalZoom Out


 

கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யானெனைத் தேற்றிப் பன்மாண்
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம்மெனச் சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய் இன்னகை யழுங்க
வினவ லானாப் புனையிழை கேளினி
வெம்மை தண்டா எரியுகு பறந்தலைக்
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி
அறுநீ ரம்பியின் நெறிமுத லுணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு
நாணுத்தளை யாக வைகிமாண் வினைக்கு
உடம்பாண் டொழிந்தமை யல்லதை
மடங்கெழு நெஞ் சநின்னுழை யதுவே.”         (அகம்.29)

இது மறந்தீர்போலும் என்றதற்குக் கூறியது.

“உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே.”  (குறுந்.99)

‘பிறவு’  மென்றதனான்   இத்தன்மையனவுங்   கொள்க.   இவை
இருவர்க்கும்     பொது.   இவற்றைக்    காமக்கிழத்தி    விரைந்து
கூறுமென்றற்கு  அவளை முற்கூறினார்.

சென்ற தேயத்து  உழப்பு நனி விளக்கி இன்றிச் சென்ற தம் நிலை
கிளப்பினும் - அங்ஙனம் கூறிய இருவர்க்குந் தான் சென்ற தேயத்தில்
நேர்ந்த வருத்தத்தை மிகவும் விளங்கக்கூறி  நனவினாற் சேறலின்றிக்
கனவினாற்  கடத்திடைச்  சென்ற  தம்முடைய நிலையைத் தலைவன்
கூறினும்:

உ-ம்:

“ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்
துள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின்
முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல்நின்
ஆய்நலம் மறப்பெனோ மற்றே சேணிகந்து
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை
முளிபுல் மீமிசை வளிசுழற் றுறா