னை நெடுநகர்
வேங்கை வென்ற சுணங்கின்
தேம்பாய் கூந்தன் மாஅ யோளே” ஐங்குறு.324)
எனவும் வரும் இன்னும் அதனானே ஊடலைவிரும்பிக் கூறுவனவுங்
கொள்க.
“ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று” (குறள்.1307)
“ஊடுக
மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா” (குறள்.1329)
என வரும். இன்னுங் கற்பியற்கண்
தலைவன்கூற்றாய் வேறுபடவருஞ் சான்றோர் செய்யுட்களெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. (5)
கற்பின்கண் தலைவிகூற்றுக்கள் நிகழுமிடங்கள் இவை எனல்
147. அவனறிவு ஆற்ற அறியு மாகலின்
ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும்
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின்
பெருமையின் திரியா அன்பின் கண்ணுங்
கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின்
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
நளியின் நீக்கிய இளிவரு நிலையும்
புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்புநனி நாட்டி
இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி
எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணும்
செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும்
காமக் கிழத்தி தன்மகத் தழீஇ
ஏமுறு விளையாட்டிறுதிக் கண்ணுஞ்
சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி
அறம்புரி உள்ளமொடு தன்வர வறியாமைப்
புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும்
தந்தையர் ஒப்பார் மக்களென் பதனான்
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்
கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது
நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப்
பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்
கொடுமை யொழுக்கங் கோடல் வேண்
|