நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5401
Zoom In NormalZoom Out


 

டி
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
காத லெங்கையர் காணின் நன்றென
மாதர் சான்ற வகையின் கண்ணும்
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்
தன்வயின் சிறைப்பினு மவன்வயின் பிரிப்பினும்
இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும்
காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுங்
கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை
வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக்
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக்
கிழவோள் செப்பல் கிழவ தென்ப.

இது, முறையானே தலைவிகூற்று நிகழும் இடங் கூறுகின்றது.

(இ-ள்.)  (அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும்
நிறுத்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற்  பெருமையின்
திரியா அன்பின்கண்ணும்) அவன் அறிவு  ஆற்ற  அறியும் ஆகலின் -
வேதத்தையுந்தரும நூலையுந் தலைவன் அறிந்த அறிவைத் தலைவி மிக
அறியுமாதலின்;ஏற்றற்கண்ணும்-அந்தணர் முதலிய மூவருந் தத்தமக்குரிய
வேள்வி செய்யுங்கால் தம் மனைவியர்  பலருள்ளுந்  தமக்கு ஒத்தாளை
வேள்விக்கண்   உரிமை வகையான்   ஏனை   மகளிரின்   உயர்த்தல்
செய்யுமிடத்தும்; நிறுத்தற்கண்ணும்-தத்தங் குலத்திற்கேற்ப நிறுத்துதலைச்
செய்யுமிடத்தும்; உரிமை கொடுத்த  கிழவோன் பாங்கின் - அவர் குலத்
திற்கேற்ற  உரிமைகளைக்  கொடுத்த  தலைவனிடத்து;   பெருமையில்
திரியா அன்பின்கண்ணும் - தத்தங் குலத்திற்கேற்ற பெருமையினின்றும்
நீங்காத    அன்பு    செய்து    ஒழுகுதற்கண்ணும்:   அறியுமாகலின்
அன்புசெய்து ஒழுகுமெனக் கூட்டுக.

என்றது,   அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு
இருவருந் தலைவியராகியவழித் தங்குலத்திற் கொண்டவரே  வேள்விக்கு
உரியர்;  ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பதூஉம்  அவர்க்குத்
தங்குலங்கட்கு ஏற்றவகையின் உரிமை கொடுப்பரென்