பூத்த பொய்கைப் புள்ளமிழ் பழனத்து
வேப்புநனை அன்ன நெடுங்க ணீர்ஞெண்
டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல
தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளல்
திதலையின் வரிப்ப வோடி விரைந்துதன்
ஈர்மலி மண்ணளைச் செறியும் ஊர
மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலோ டார்தழை தைஇ
விழவாடு மகளிரொடு தழூஉவணிப் பொலிந்து
மலரேர் உண்கண் மாணிழை முன்கைக்
குறுந்தொடி தொடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலுநின் காதலி யெம்போல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து
நெல்லுடை நெடுநகர் நின்னின்று உறைய
என்ன கடத்தளோ மற்றே தன்முகத்
தெழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி
அடித்தென உருத்த தித்திப் பல்லூழ்
நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு
கூர்நுதி மழுங்கிய எயிற்றள்
ஊர்முழுது நுவலும்நிற் காணிய சென்மே.”
(அகம்.176)
என வரும்.
எதிர்பெய்து மறுத்த ஈரமெனவே எதிர்பெய்யாது மறுத்த ஈரமுங் கொள்க.
“கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற
மீன்முள் அன்ன வெண்கால் மாமலர்
பொய்தன் மகளிர் விழவணிக் கூட்டும்
அவ்வயல் நண்ணிய வளங்கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி யல்கல்
பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்புசெய் தொடியி னேர வாகி
மாக்க ணடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவையென மயங்கி
யானோம் என்னவும் ஒல்லார் தாமற்று
இவைபா ராட்டிய பருவமு முளவே
யினியே, புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்
திதிலை அணிந்த தேங்கொள் மென்முலை
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே
தீம்பால் படுதல் தாமஞ் சினரே
ஆயிடைக், ‘கவவுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச்
செவிலி கையென் புதல்வனை நோக்கி
நல்
|