நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5405
Zoom In NormalZoom Out


 

லோர்க் கொத்தனிர் நீயி ரிஃதோ
செல்வற் கொத்தனெம் யாமென மெல்லவென்
மகன்வயிற் பெயர்தந் தேனே யதுகண்டு
யாமுங் காதலெம் அவற்கெனச் சாஅய்ச்
சிறுபுறங் கவையினன் ஆகஉறுபெயல்
தண்டுளிக் கேற்ற பழவுழு செஞ்செய்
மண்போன் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே
நெஞ்சறை போகிய அறிவி னேற்கே.’”         (அகம்.26)

இதனுள்  ஒருத்தியை வரைந்து கூறாது நல்லோரைப்   பொதுவாகக்
கூறியவாறும்  வேண்டினமெனப்     புலம்புகாட்டிக்     கலுழ்ந்ததென
ஈரங்கூறியவாறுங் காண்க.

தங்கிய  ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி  எங்கையர்க்கு உரையென
இரத்தற்கண்ணும் - பரத்தையர்மாட்டுத் தங்கிய செவ்வியை   மறையாத
ஒழுக்கத்தோடே வந்த தலைவனை  நீ கூறுகின்ற பணிந்த  மொழிகளை
எங்கையர்க்கு வணங்கிக் கூறென இரந்து கோடற்கண்ணும்:

உ-ம்:

அகன்றுறை யணிபெற” என்னும் மருதக்கலி (73) யுள்

நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித்
தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன்
ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாதுசோர்ந்
திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்”

என்பனகூறி,

“மண்டுநீ ராரா மலிகடல் போலுநின்
தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும்
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனின்
தோலாமோ நின்பொய் மருண்டு”                 (கலி.73)

எனவும் எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க.

செல்லாக் காலைச்  செல்கென  விடுத்தலும் - தலைவன்   செல்லா
னென்பது இடமுங் காலமும்பற்றி அறிந்தகாலத்து     ஊடலுள்ளத்தாற்
கூடப்பொறாதாள் செல்கெனக் கூறி விடுத்து ஆற்று தற்கண்ணும்:

உ-ம்:

புள்ளிமி ழகல்வயல்” என்னும் மருதக்கலியுள்,

“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர்வயிற் சென்றி அணிசிதைப்பான்
ஈங்கெ