நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5409
Zoom In NormalZoom Out


 

தகுதிக்கண்ணும் - நெஞ்சைச் சுடுமென்று கூறி  அவன்  தவற்றைக்
கூறுதலைத் தவிராமற் கூறுதற்குத் தக்க தகுதியிடத்தும்;

இன், நீக்கப்பொருட்டு; பகுதி - கூறுபாடு, ஆகுபெயர்; பகுதிகளைக்
காத்தற்குப் பிரிவேனெனக் கூறிப் பிரிந்து பாணர் முதலியோர்  புதிதிற்
கூட்டிய பரத்தையரிடத்தே ஒழுகிய மெய்வேறுபாட்டொடு  வந்தானைக்
கண்டு   அப்பகுதிகளைப்   பரத்தையராகக்   கூறுவாளாயிற்று.  அது,
“இணைபட நிவந்த” என்னும் மருதக்கலியுள்,

“கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப்
பண்ணினாற் களிப்பிக்கும் பாணன்காட் டொன்றானோ
பேணானென் றுடன்றவர் உகிர்செய்த வடுவினான்
மேல்நாள்நின் தோள்சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை
நாடிநின் தூதாடித் துறைச்செல்லாள் ஊரவர்
ஆடைகொண் டொலிக்குநின் புலைத்திகாட் டென்றாளோ
கூடியார்ப் புனலாடப் புணையாய மார்பினில்
ஊடியார் எறிதர ஒளிவிட்ட அரக்கினை;
வெறிதுநின் புகழ்களை வேண்டாரின் எடுத்தேத்தும்
அறிவுடை அந்தணன் அவளைக்காட் டென்றானோ
களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட உருவின்மேல்
குறிபெற்றார் குரல்கூந்தல் கோடுளர்ந்த துகளினை” (கலி.72)

என்பவற்றாற் பாணர் முதலியோர் வாயிலாயவாறு காண்க.

“ஏந்தெழின் மார்ப எதிரல்ல நின்வாய்ச்சொல்
பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை
சாந்தழி வேரை சுவற்றாழ்ந்த கண்ணியை
யாங்குச்சென் றீங்குவந் தீத்தந்தாய்; கேளினி
ஏந்தி, எதிரிதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்
குதிரை வழங்கிவரு வல்;
அறிந்தேன் குதிரைதான்
பால்பிரியா ஐங்கூந்தல் பன்மயிர்க் கொய்சுவல்
மேல்விரித்து யாத்த சிகழிகைச் செவ்வுளை
நீல மணிக்கடிகை வல்லிகை யாப்பின்கீழ்
ஞாலியன் மென்காதிற் புல்லிகைச் சாமரை
மத்திகைக் கண்ணுறை யாகக் கவின்பெற்ற
உத்தி யொருகாழ்நூ லுத்