தரியத் திண்பிடி
நேர்மணி நேர்முக்காழ்ப் பல்பல கண்டிகைத்
தார்மணி பூண்ட தமனிய மேகலை
நூபுரப் புட்டி லடியொ டமைத்தியாத்த
வார்பொலங் கிண்கிணி யார்ப்ப வியற்றிநீ
காதலித் தூர்ந்தநின் காமக் குதிரையை
ஆய்சுதை மாடத் தணிநிலா முற்றத்துள்
ஆதிக் கொளீஇய வசையினை யாகுவை
வாதுவன் வாழிய நீ;
சேகா, கதிர்விரி வைகலிற் கைவாரூஉக் கொண்ட
மதுரைப் பெருமுற்றம் போலநின் மெய்க்கட்
குதிரையோ வீறியது;
கூருகிர் மாண்ட குளம்பி னதுநன்றே
கோரமே வாழிகுதி ரை;
வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்திக்
குதிரை யுடலணி போலநின் மெய்க்கட்
குதிரையோ கவ்வியது;
சீத்தை, பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே
வியமமே வாழி குதிரை;
மிக நன்று, இனியறிந்தேன் இன்றுநீ யூர்ந்த குதிரை
பெருமணம் பண்ணி யறத்தினிற் கொண்ட
பருமக் குதிரையோ வன்று; பெருமநின்,
ஏதில் பெரும்பாணன் தூதாட வாங்கேயோர்
வாதத்தான் வந்த வளிக்குதிரை ஆதி
உருவழிக்கும் அக்குதிரை யூரல்நீ ஊரில் பரத்தை
பரியாக வாதுவனாய் என்று மற்றச்சார்த்
திரிகுதிரை யேறிய செல்.” (கலி.96)
இதனுட் பாணன் தூதாட வாதத்தான் வந்த குதிரையென்பதனான்
அவன் கூட்டிய புதிய பரத்தையர் என்பதூஉம் அவன் பகுதியி னின்று நீங்கியவாறுங்
குதிரையோ வீறியதென்பது முதலியவற்றாற் கொடுமை நெஞ்சைச்சுடுகின்றவாறும்
அதனை நீக்கிய
பரத்தை யரைக்
குதிரையாகக் கூறித் தான் அதற்குத் தக்குநின்றவாறுங் காண்க.
கடவுட்பாட்டு (கலி.93) ‘ஆங்கோர் பக்கமும்’
யானைப் பாட்டுக்
(கலி.97) ‘காவற் பாங்கின் பக்க’ முமாம்.
(கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின்கண்ணும்)
கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி - அங்ஙனம் பகுதியினீங்கிப்
பரத்தையர்மாட்டு ஒழுகிக் கொடுமை
செய்த
ஒழுக்கத்தைத் தலைவி பொறுத்தலை வேண்டி; அடிமேல் வீழ்ந்த
|