“புள்ளிமி ழகல்வயல்”
என்னும் மருத்தக்கலியுள்,
“அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி
மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதால்
தோய்ந்தாரை அறிகுவென் யானெனக் கமழுநின்
சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ;
புல்லலெம் புதல்வனைப் புகலக னின்மார்பிற்
பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானால்
மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின்
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ;
கண்டேஎம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி
வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானால்
நண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின்
கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ ளல்லளோ;
எனவாங்கு,
பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர்வயின் சென்றி அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து.” (கலி.79)
இது தலைவனிடத்தினின்றும் புதல்வனைச் சிறைத்தது.
“ஞாலம் வறந்தீர்”
என்னும் மருதக்கலியுள்,
“அவட்கினி தாகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர்
புலத்தகைப் புத்தேளில் புக்கான் அலைக்கொரு
கோல்தா நினக்கவள் யாராகும் எல்லா
வருந்தியாம் நோய்கூர நுந்தையை என்றும்
பருந்தெறிந் தற்றாகக் கொள்ளுங்கொண் டாங்கே
தொடியு முகிரும் படையாக நுந்தை
கடியுடை மார்பின் சிறுகண்ணும் உட்காள்
வடுவுங் குறித்தாங்கே செய்யும் விடுவினி
அன்ன பிறவும் பெருமான் அவள்வயின்
துன்னுதல் ஓம்பித் திறவதின் முன்னிநீ
ஐயமில் லாதவ ரில்லொழிய எம்போலக்
கையா றுடையவர் இல்லல்லால் செல்லல்
அமைந்த தினிநின் றொழில்.” (கலி.82)
இது காதற்பரத்தையற்பாற் புதல்வன் செல்லாமற் சிறைத்தது.
அவன்வயிற் பிரிப்பினும் - தன்னொடு மைந்தனிடை உறவு நீக்கி
அவனைத் தலைவனொடு சாத்துதற் கண்ணும்.
என்றது, எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம்.
உ-ம்:
“மைபடுசென்னி”
என்னும் மருதக்கலியுள்,
“மறைநின்று, தாமன்ற வந்தீத் தனர்;
ஆயினாயிழாய், தாவாத எற்குத் தவறுண்டோ காவாதீங்
கீத்தை யிவனையாங் கோடற்குச் சீத்தையாங்
கன்றி அதனைக் கடியவுங் கைந்நீவிக்
குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்குத்
தந்
|