தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா
அன்பிலி பெற்ற மகன்.”
(கலி.86)
என்புழி “அறனில்லா அன்பிலி பெற்ற மகன்” எனவும், “நின்மகன்
றாயாதல் புரைவதா லெனவே” (அகம்.16) என்புழி “நின்மகன்”
எனவும் பிரித்தவாறு காண்க.
இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்ணும் - இன்னாங்குப் பயக்குஞ்
சூளுறவினைத் தலைவன் சூளுறுவலெனக் கூறுமிடத்தும்:
தலைவன் ‘வந்தகுற்றம் வழிகெட’ ஒழுகிக், களவிற் சூளுற வான்
வந்த ஏதம் நீக்கி, இக்காலத்துக் கடவுளரையும் புதல்வனையுஞ்
சூளுறுதலின் ‘இன்னாத சூள்’ என்றார்.
அது களவுபோலச்
சூளுறுதலின் ‘தொல்சூள்’ என்றார்.
உ-ம்:
“ஒருஉக் கொடியிய னல்லார்”
என்னும் மருதக்கலியுள்,
“வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு:
இனித் தேற்றேம்யாம்,
தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு.”
(கலி.88)
எனத் தலைவி எம்மேலே இப் பொய்ச்சூளான் வருங்கேடு
வருமென மறுத்தவாறு காண்க.
காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும்
பொருளின்கண்ணும் - நலம்பாராட்டிய காமக்கிழத்தியர்
தலைவி
தன்னிற் சிறந்தாராகத் தன்னான்
நலம்பாராட்டப்பட்ட இற்பரத்தையர்
மேல் தீமையுறுவரென முடித்துக்கூறும் பொருளின் கண்ணும்:
உ-ம்:
“மடவ ளம்மநீ இனிக்கொண் டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலர்நீ
ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே.”
(ஐங்குறு.67)
இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்தாக வரைந்து கொண்ட பரத்தை
தன்னோடு இளமைச் செவ்வி ஒவ்வா என்னையுந் தன்னோடொப்பித்துத்
தன் பெரிய நலத்தாலே மாறுபடுமென்பவென
அவள் நலத்தைப் பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர்
|