பே.”
(நற்.24)
இது செய்தனையெனத் தலைவி உவந்து கூறியது.
“வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.”
(குறுந்.21)
இது கானங் காரெனக் கூறவும் வாராரென்றவழி அது கூறினும்
யானோ தேறேனெனப் பிரிநிலை ஓகாரத்தாற் பிரிந்தது.
“யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின்
உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத்
திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப்
பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை
பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
அருஞ்சுர வைப்பிற் கானம்
பிரிந்துசே ணுறைதல் வல்லுவோரே.”
(குறுந்.154)
இது, வல்லுவோர் என்னும் பெயர்கூறித் தோழி கொடுமை கூறியவழி அவளையே
பிரிதல்வன்மை யாங்கறிந்தனரெனத் தலைவி வினவுதலின்
அது பின்னுங் கேட்டற்கு அவாவியதாம்.
இனித் தோழியிடத்துத் தலைவனைக் காய்தல் முதலியன வருமாறு:
“நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக்
கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவிய தெவனோ அன்பிலங் கடையே.”
(குறுந்.93)
இது, காய்தல்.
“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயருந் துறைவற்குப்
பைஞ்சாய்ப் பாவை யீன்றனென் யானே.” (ஐங்குறு.155)
இது, பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப்பேற்றிற்கு
உரிய காலங்கழிய ஒழுகா நின்றாயென நெருங்கிய தோழிக்கு யான்
களவின்கண் மகப்பெற்றேனெனக் காய்ந்து கூறியது.
“கொடிப்பூ வேழந் தீண்டி யயல
வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கும்
மணித்துறை யூரன் மார்பே
பனித்துயில் செய்யு மின்சா யற்றே.”
(ஐங்குறு.14)
இஃது, உவத்தல்.
|