புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து - களவுக்
காலத்துப் புணர்ந்து உடன் போகிய தலைவி கற்புக்காலத்து
இல்லின்கண் இருந்து; இடைச்சுரத்து இறைச்சியும் அன்புறுதக்க
வினையுஞ் சுட்டிக் கிளத்தல் தானே - தான் போகிய காலத்துக் காட்டின்கட் கண்ட கருப்பொருள்களையுந் தலைவன் தன்மேல்
அன்பு செய்தற்குத்தக்க கருப்பொருளின் தொழில்களையும் கருதிக்
கூறுதல்தானே; கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும் - தலைவன்
எடுத்துக்கொண்ட காரியத்திற்கு முடித்தலாற்றான்கொலென்று அஞ்சும்
அச்சமாம் எ-று.
எனவே, அருத்தாபத்தியாற் புணர்ந்து உடன் போகாத தலைவி மனைக்கணிருந்து தலைவன் கூறக்கேட்டு அக்கருப்பொருள்கள்
தம்
மேல் அன்புறுதக்க வினைகளைக் கூறுதல் தலைவன் செய்வினைக்கு அச்சமாகாது வருவரெனத் துணிந்து கூறுதலாமென்றாராயிற்று.
“கான யானை தோல்நயந் துண்ட
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்க லுலவை யேறி யொய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
கொல்லே மென்ற தப்பல்
சொல்லே தகறல் வல்லு வோரே.” (குறுந்.79)
புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை அழைக்கும்
வருத்தங் கண்டு வினைமுடியாமல் வருவரோவென அஞ்சியவாறு
காண்க.
“அரிதாய வறனெய்தி” என்னும் (11) கலிப்பாட்டுத் தலைவன் அன்புறுதக்கன கூறக்கேட்ட
தலைவி அவற்றைக் கூறிப் புனைநலம் வாட்டுநர்
|