நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5424
Zoom In NormalZoom Out


 

அல்லரென வரவு கருதிக் கூறியவாறு காண்க. இதனுள்ஆற்றுவிக்குந்
தோழி வருவர்  கொல்லென    ஐயுற்றுக்   கூறலின்மையின்    தோழி
கூற்றன்மையும் உணர்க.

“புல்லுவிட் டிறைஞ்சிய  பூங்கொடி தகைப்பன”   (கலி.3)   என்றாற்
போல்வன   தலைவி   கூற்றாய்   வருவன   உளவாயின் இதன் கண்
அடக்குக.  (7)

தோழி முதலிய வாயில்கட்கு எய்தாததெய் துவித்தல்

148. தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினும்
ஆவயின் நிகழு மென்மனார் புலவர்.
இது தோழி வாயில்கட்கு எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.)   தோழி  உள்ளுறுத்த  வாயில்  புகுப்பினும் - தலைவனது
செலவுக்  குறிப்பு   அறிந்து     அவனைச்    செலவழுங்குவித்தற்குத்
தோழி  யுள்ளிட்ட வாயில்களைத்  தலைவி  போகவிட்ட  அக்காலத்து
அவர் மேலன  போலக்   கூறும்   கூற்றுக்களும்;  ஆவயின்  நிகழும்
என்மனார்  புலவர்  -  தலைவி   அஞ்சினாற்போல   அவ்வச்சத்தின்
கண்ணே நிகழுமென்று  கூறுவர்  புலவர் எ-று.

“அறனின்றி யயல்தூற்றும்”   (கலி.3)   என்னும்  பாலைக்  கலியுள்
இறைச்சியும்  வினையுமாகிய  பூ  முதலியன கூறியவாற்றான்  தலைவிக்
கிரங்கி நீர் செலவழுங்குமெனக் கூறுவாள் “யாமிரப்பவு மெமகொள்ளா 
யாயினை” எனப் பிற வாயில்களையுங் கூட்டி உரைத்தவாறு காண்க. (8)

கற்பின்கண் தோழிக்குரிய கூற்றுக்கள் நிகழுமிடமிவையெனல்

பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த
தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும்
அற்றமழி வுரைப்பினும் அற்ற மில்லாக்
கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ்
சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்
அடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை
அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்
பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி
இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்
வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியுஞ்
சிறந்த புதல்வனை நேராது புலம்பினும்
மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்
பேணா வொழுக்க நாணிய பொருளினுஞ்