ற்குந் தலைவியை மறந்து ஒழுகினும்:
உ-ம்:
“கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிறுந்
தேர்வண் கோமான் தேனூ ரன்னவிவள்
நல்லணி நயந்துநீ துறத்தலின்
பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே.” (ஐங்குறு.55)
இதனுள், துறத்தலினெனப் பொதுவாகக் கூறினாள் அற முதலிய
வற்றைக் கருதுதலின்.
அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடங்கக்
காட்டுதற் பொருளின்கண்ணும் - புறத்து ஒழுக்கத்தை உடையனாகிய
தலைவன்மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப் புறத்து ஒழுக்கமின்றி
நின்மேல் அவர் அன்புடையரென அவ்வேறுபாடு நீங்க நெருங்கிக்
கூறுதலையுடைத்தாகிய பொருளின்கண்ணும்:
உ-ம்:
“செந்நெற் செறுவிற்கதிர்கொண்டு கள்வன்
தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற்
கெல்வளை ஞெகிழச் சாஅய்
அல்ல லுழப்ப தெவன்கொ லன்னாய்.” (ஐங்குறு.27)
இதன் உள்ளுறையாற் பொருளுணர்க.
பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு
ஆக்கிக் கொடுத்தற்கண்ணும் - பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து
அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச், சில
மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின் கண் ஊடல்நீங்குந்
தன்மை உளதாக்கிக் கூட்டும் இடத்தும்:
உ-ம்:
“நகைநன் றம்ம தானே இறைமிசை
மாரிச் சுதையின் ஈரம்புறத் தன்ன
கூரற் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண்டோ டன்ன கயல்குறித்துக்
கள்ளார் உவகைக் கலிமகிழ் உழவர்
காஞ்சியங் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
மென்கழைக் கரும்பினன்பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதழி கடுநீர் நோக்கிப் பைப்பயப்
பார்வ லிருக்கும் பயங்கே ழூர
யாமது பேணின்றோ விலமே நீநின்
பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணதிர்ந் தியம்ப
மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி
யெம்மனை வாரா யாகி முன்னாள்
நும்மனைச் சேர்ந்த ஞான்றை யம்மனைக்
குறுந்தொடி மடந்தை யுவந்தனள் நெடுந்தேர்“
|