நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5430
Zoom In NormalZoom Out


 

தகன்றலை சிவப்பச்
சேரலன் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் லியானைப் பொலம்பூ ணெழினி
நாரரி நறவி னெருமை யூரன்
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனென்
றெழுவர் நல்வல மடங்க வொருபகன்
முரசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக்
கொன்றுகளம் வேட்ட ஞான்றை
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே.”    (அகம்.36)

இதனுள்   வென்றி  கொள்வீர  ரார்ப்பினும்  பெரிதெனவே  நாண்
நீங்கிப் புலப்படுதலை மகிழ்ந்தவாறு காண்க.

சிறந்த  புதல்வனை  நேராது   புலம்பினும்  -  யாரினும்    சிறந்த
புதல்வனை   வாயிலாகக்கொண்டு   சென்றுழி   அவற்குந்    தலைவி
வாயில் நேராமையான் தலைவன் வருந்தினும்:

உ-ம்:

“பொன்னொடு குயின்ற பன்மணித் தாலித்
தன்மார்பு நனைப்ப தன் றலையு மிஃதோ
மணித்தகைச் செவ்வாய் மழலையங் கிளவி
புலர்த்தகைச் சாந்தம் புலர்தொறு நனைப்பக்
காணா யாகலோ கொடிதே கடிமனைச்
சேணிகந் தொதுங்கு மாணிழை யரிவை
நீயிவ ணேரா வாயிற்கு நாணுந்
தந்தையொடு வருவோள் போல
மைந்தனொடு புகுந்த மகிழ்நன் மார்பே”


என வரும்.

மாண்  நலம்  தா  என  வகுத்தற்கண்ணும்   -   இவள்   இழந்த
மாட்சிமைப்பட்ட   நலத்தைத்    தந்து   இகப்பினும்   இகப்பாயெனத்
தலைவனை வேறுபடுத்தற்கண்ணும்:

உ-ம்:

“யாரை யெலுவ யாரே நீயமக்கு
யாரையு மல்லை நொதும லாளனை
யனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பின்
கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன்
வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன
ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர்
அணிந்திடு பல்பூ மரீஇ யார்ந்த
ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக்
கடல்கெழு மாந்தை யன்னவெம்
வேட்டனை யல்லையா னலந்தந்து சென்மே”      (நற்.395)

என வரும்.

“நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீ னுணங்கல் கவரு