ாண வியையுங்கொ லென்றோழி
வண்ணந்தா வென்கந் தொடுத்து. (ஐந்.எழு.66)
இதுவும் அதன் பாற்படும்.
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் - பரத்தை தலைவியைப்
பேணாது ஒழுகிய ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின்
கண்ணும்: தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும்.
உ-ம்:
“பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து
வாளை நாளிரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி
யெதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த
திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
கணைய னாணி யாங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மையீ ரோதி மடவோ யானுநின்
சேரி யேனே அயலி லாட்டியேன்
நுங்கை யாகுவெ னினக்கெனத் தன்கைத்
தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர
நுதலுங் கூந்தலு நீவிப்
பகல்வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.” (அகம்.385)
இதனுள், யான் நினக்குத் தோழியாவேனெனப் பரத்தை
நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு தான்
நாணினே னென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க.
இன்னுந் தலைவனது பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய
பொருளின்கண்ணுமெனவுங் கூறுக.
“யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமியள் வைகிய
பொய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானுந்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு ணாணிக் கரப்பா டும்மே” (குறுந்.9)
என வரும்.
இவை இரண்டும் பொருள்.
(சூள்நயத் திறத்தாற் சோர்வு கண்டு அழியினும்) நயத் திறத்தாற் சூள்
சோர்வு கண்டு அழியினும் - கூடுதல் வேட்கைக் கூறுபாட்டான்
தான் சூளுறக்கருதிய சூளுறவினது பொய்ம்மையைக் கருதித் தலைவி
வருந்தினும்:
|