நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5435
Zoom In NormalZoom Out


 

உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாது மில்லதோர் போர்வையஞ் சொல்லே.”   (நற்.310)

இது      விறலிக்கு     வாயின்    மறுத்தது.    மறுப்பாள்போல்
நேர்வ வந்துழிக் காண்க.

(நீத்த கிழவனை நிகழுமாறு  படீஇக்  காத்த தன்மையிற் கண்ணின்று
பெயர்ப்பினும்)    நீத்த    கிழவனை   -    பரத்தையிற்     பிரிந்து
தலைவியைக்    கைவிட்ட    தலைவனை;    நிகழுமாறு   படீஇ   -
தானொழுகும்  இல்லறத்தே படுத்தல்  வேண்டி; காத்த  தன்மையின்  -
புறத்தொழுக்கிற்   பயனின்மை   கூறிக்    காத்த    தன்மையினானே;
கண்இன்று     பெயர்ப்பினும்   -  கண்ணோட்டமின்றி  நீக்கினும்:

உ-ம்:

“மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின் மாலை யுற்றெனப்
புகுமிடன் அழியாது தொகுபுடன் குழீஇப்
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழியர் ஐயவெம் தெருவே.”          (குறுந்.139)

இதனுள்   ‘அம்பலொடு வார’  லெனவே   பன்னாள்  நீத்தமையுங்
கண்ணின்று   பெயர்த்தமையுங்    கூறிற்று.  கோழி  போலத்   தாயர்
மகளிரைத்   தழீஇக்    கொண்டாரென்றலிற்   புறம்போயும்   பயமின்
றெனக் காத்த தன்மை கூறிற்று.

(பிரியுங் காலை எதிர்நின்று  சாற்றிய மரபுடை எதிரும்   உளப்படப்
பிறவும்)       பிரியுங்   காலை   எதிர்நின்று  சாற்றிய  -  தலைவன்
கற்பிடத்துப் பிரியுங்கால்   தெய்வத்   தன்மையின்றி      முன்னின்று
வெளிப்படக்    கூறிய;   மரபுடை   எதிரும்   உளப்படப்  பிறவும் -
முறையுடைத்தாகிய  எதிர்காலமும் இறந்தகாலமும் உட்படப்  பிறவற்றுக்
கண்ணும்:

‘எதிரும்’ என்ற  உம்மை,   எச்சவும்மை. ‘பிற’ ஆவன - தலைவன்
வரவுமலிந்து    கூறுவனவும்    வந்தபின்னர்     முன்பு   நிகழ்ந்தன
கூறுவனவும்,        வற்புறுப்பாள்     பருவமன்றெனப்     படைத்து
மொழிவனவுந்    தூது    கண்டு   கூறுவனவுந்,  தூது   விடுவனவுஞ்
சேணிடைப்   பிரிந்தோன் இடைநிலத்துத் தங்காது  இரவின்  வந்துழிக்
கூறுவனவும்,     நிமித்தங்காட்டிக்     கூறுவனவும்,  உடன்  சேறலை
மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம்.

“பாஅ