நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5438
Zoom In NormalZoom Out


 

கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க.

“கன்னவில் தோளான் கடிநாள் விலக்குதற்
கென்னை பொருணினைந்தார் ஏந்திழாய் - பின்னர்
அமரேற்றுக் கொள்ளுமென்றஞ்சினேன் அஞ்சார்
நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.”

இன்னுந்     தோழிகூற்றாய்ப்    பிறவாற்றான்   வருவனவெல்லாம்
இதனான் அமைக்க.

“அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பலர்மடி பொழுதி னலமிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃதூரே.”      (ஐங்குறு.104)

இது     புதல்வற்பெற்றுழித்     தலைவன்      மனைக்கட்சென்ற
செவிலிக்கு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி அவன்    ஊர்
காட்டிக் கூறியது.

வகைபட   வந்த   கிளவி  எல்லாம்  தோழிக்கு  உரிய என்மனார்
புலவர்  - தோழி    கூற்றாய்த்  தலைவிகூற்றினுள்   அடங்குவதன்றித்
தோழிக்கே கூறத்தகும் வேறுபாடு  உண்டாகவந்த    கிளவிகளெல்லாந்
தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர் எ-று.

இச்  சூத்திரத்துக்கண்   ஏழனுருபும்  அவ்வுருபு  தொக்கு   நின்று
விரிந்தனவுஞ் செயினென்னும்   வினையெச்சமும்      உரியவென்னுங்
குறிப்புவினை     கொண்டன.   அவற்றை   இன்னவிடத்தும்    இன்
னவிடத்தும் இன்னது செய்யினும் உரியவென்று ஏற்பித்து முடிக்க. (9)

காமக்கிழத்தியர் கூற்றுக்கள் நிகழுமிட மிவை எனல்

151. புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்
இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும்
பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும்
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறையின்று பெருகிய பருவரற் கண்ணுங்
காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின்
தாய்போல் தழீஇக் கழறியம் மனைவியைக்
காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும்
இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து
பின்னர் வந்த வாயிற் கண்ணும்
மனையோ ளொத்தலில் தன்னோர் அன்னோர்
மிகைபடக் குறித்த கொள்கைக