அந்தில்
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்
வகையமை பொலிந்த வனப்பமை தெரியல்
சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென
ஆதி மந்தி பேதுற் றினையச்
சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும்
அந்தண் காவிரி போலக்
கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே.” (அகம்.76)
இதனுள் எஞ்சேரி வந்தெனக் கழறுபவென்ப அவன் பெண்டிரென முன்னைஞான்று புல்லுதன் மயக்குதலான் தலைவி புலந்தவாறும்
அதுகண்டு காமக்கிழத்தி கொண்டு கைவலிப்பலெனப் பெருமிதம்
உரைத்தவாறுங் காண்க.
இது, பெருமிதங்கூறலின் இளமைப்பருவத்தாள் கூற்றாயிற்று.
“ஒண்டொடி யாயத் துள்ளுநீ நயந்து
கொண்டனை யென்பவோர் குறுமகள்” (அகம்.96)
எனக் காமஞ்சாலா இளமையோளைக் கூறிற்று.
இரட்டுற மொழிதலென்பதனாற் பரத்தையரிடத்துப் புலப்பட
ஒழுகாது அவர் புல்லுதலை மறைத்தொழுகுதலாற் காமக்
கிழத்தியர்க்குப் பிறக்கும் புலவிக்கண்ணும் அவர்க்குக் கூற்று
நிகழுமெனவும் பொருள் கூறுக.
உ-ம்:
“கண்டேனின் மாயங் களவாதல் பொய்ந்நகா” (கலி.90)
என்னும் மருதக்கலியுட் காண்க.
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் - இல்லிடத்திருந்த
தலைவனுந் தலைவியும் ஊடியும் உணர்த்தியுஞ் செய்த தொழிலைக்
கேட்டு இகழும் இகழ்ச்சிக்கண்ணும்:
உ-ம்:
“கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.” (குறுந்.8)
“நன்மரங் குழீஇய நனைமுதிர் சாடிப்
பன்னா ளரித்த கோஒய் உடைப்பின்
மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்ப னெல்லின் வேளூர் வாயில்
நறுவிரை தெளித்த நாறிணர் மாலை
பொறிவரி யினவண் டூதல கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
புனையிருங் கதுப்பி னீகடுத் தோள்வயின்
|