அனையே னாயி னணங்குக என்னென
மனையோள் தேற்றும் மகிழ்ந னாயின்
யார்கொல் வாழி தோழி நெருநை
தார்பூண் களிற்றற் றலைப்புணை தழீஇ
வதுவை யீரணிப் பொலிந்த நம்மொடு
புதுவது வந்த காவிரிக்
கோடுதோய் மலிர்நிறை யாடி யோரே” (அகம்.166)
என வரும்.
இவையும் இளையோர் கூற்று. பிறவும் அன்ன.
பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும் - வெவ்வேறாகிய
புதல்வரைத் தாங்கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும்:
‘வேறுபல புதல்வ’ ரென்றார் முறையாற்கொண்ட மனைவியர்
பலரும் உளராதலின்,
“ஞாலம் வறந்தீர” என்னும் மருதக்கலியுள்,
“அடக்கமில் போழ்தின்கண் தந்தைகா முற்ற
தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும்
மருப்புப் பூண் கையுறை யாக அணிந்து
பெருமா நகைமுகங் காட்டென்பாள் கண்ணீர்
சொரிமுத்தங் காழ்சோர்வ போன்ற.” (கலி.82)
இது, முதிர்ந்தாள் உண்ணயந்து கூறியது.
“மற்றும், வழிமுறைத் தாயுழைப் புக்காற் கவளும்
மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து
முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே
நினைக்கியாம் யாரே மாகுது மென்று
வனப்புறக் கொள்வன நாடி யணிந்தனள்.” (கலி.82)
இதனுள் நோய் தாங்கினளென இளமைப்பருவத்து மகிழ்ச்சியும்
முதிர்ந்த பருவத்து மறவியுந் தோன்றக் கூறாமையினானும் வழி
முறைத்தா யென்றமையானும் இஃது இடைநிலைப் பருவத்தாள் கூற்று.
“அவட்கினி தாகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர்
புலத்தகைப் புத்தேளில் புக்கான்.” (கலி.82)
என்றவழிப் ‘புத்தே’ளென்றது
தலைநின்றொழுகும் இளையோளைக்
கூறியது.
“தந்தை யிறைத்தொடி மற்றிவன் றன்கைக்கண்
தந்தாரியா ரெல்லாஅ விது
இஃதொன்று.” (கலி.84)
என்றாற்போல அவள் கொடுப்பக் கொள்வனவுங் கொள்க.
(மறையின் வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று
பெருகிய பருவரற்கண்ணும்) மறையின் வந்த - தலைவற்கு வேறொரு
தலைவியொடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின்
வேறுபாட்டான் தமக்குப் புலப்பட வந்த; மனையோள் செய்வினை -
மனையோளாதற்குரியவள் தமர்பணித்தலிற்
றைந்நீராடலும் ஆறாடலும்
முதலிய செய்தொழில்களைச் செய்யு
|